ஒரே காரில் ஓபிஎஸ், செங்கோட்டையன் பயணம்.. இபிஎஸ் சொன்ன பதில் என்ன?

ops sengottaiyan 1

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. அரசியல் தலைவர்கள் இப்போதே தங்கள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.. திமுக கூட்டணி வலுவாக உள்ள நிலையில், பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது..


மறுபுறம் அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.. ஆனால் அதிமுக பல பிரிவுகளாக பிரிந்து கிடப்பதால் இந்த கூட்டணி பலவீனமான கூட்டணியாகவே பார்க்கப்படுகிறது..

ஆனால் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை ஒன்றிணைத்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கடந்த 5-ம் தேதி தெரிவித்தார்.. மேலும் 10 நாட்களுக்குள் இபிஎஸ் அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என்றும் அவர் காலக்கெடு விடுத்தார்…

இதை தொடர்ந்து டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார் செங்கோட்டையன்.. மேலும் இந்த காலக்கெடு முடிந்த நிலையில் செங்கோட்டையன் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார்.. இதனால் அதிமுக இணைப்பு என்பது மீண்டும் கேள்விக் குறியானது.

இந்த நிலையில், தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் தேவருக்கு மரியாதை செய்ய ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் இருவரும் ஒரே காரில் பயணம் செய்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரின் முன் சீட்டில் ஒபிஎஸும், பின் சீட்டில் செங்கோட்டையனும் அமர்ந்து சென்றனர்..

இந்த பயணம் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.. அதிமுக தலைமைக்கு கெடு விதித்த நிலையில் கட்சிக்கு எதிராக தனது நடவடிக்கைகளை கே .ஏ .செங்கோட்டையன் தொடங்கி விட்டாரா? செங்கோட்டையன் முன்னெடுப்பிற்கு ஓ. பன்னீர்செல்வம் இசைவு தெரிவிக்க வாய்ப்புள்ளதா? தலைமைக்கு எதிராக செயல்படும் செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவாரா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த சூழலில் இன்று பசும்பொன்னில் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவரிடம் ஓபிஎஸ் – செங்கோட்டையன் ஒரே காரில் பயணம் செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.. அதற்கு “ 2 பேரும் ஒன்றாக வந்தது பற்றி தெரியவில்லை.. வந்தால் தான் பார்க்க வேண்டும்..” என்று தெரிவித்தார்..

Read More : Flash: முன் சீட்டில் OPS.. பின் சீட்டில் செங்கோட்டையன்.. பசும்பொன் நோக்கி இருவரும் ஒரே காரில் பயணம்..!!

RUPA

Next Post

முதியவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 11,000..! இந்த தபால் அலுவலகத் திட்டம் பற்றி தெரியுமா?

Thu Oct 30 , 2025
தபால் நிலையத்தில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் கீழ், ஒருவர் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். மனைவி அல்லது கணவருடன் இணைந்து முதலீடு செய்தால், அவர் ரூ.60 லட்சம் வரை முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச முதலீடு ரூ.1000 இல் இருந்து தொடங்குகிறது. திட்ட காலம் 5 ஆண்டுகள். விரும்பினால் இதை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 8.2 சதவீதம். இது அரசு […]
pension scheme

You May Like