பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 11-வது ஜெயந்தி மற்றும் குரு பூஜை பசும்பொன்னில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.. இதையொட்டி ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் 3 பேரும் கூட்டாக தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.. அதிமுக தலைமைக்கு எதிராக இருக்கும் இந்த மூவர் அணி பசும்பொன்னில் கூட்டாக மரியாதை செய்தது தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து மூன்று பேரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.. அதிமுகவை ஒன்றிணைக்க மீண்டும் சபதம் எடுத்துள்ளதாகவும், திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைக்க உறுதிப்பூண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்..
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் கூட்டாக இணைந்தது தொடர்பான அவர் பதிலளித்தார்.. ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன் திமுகவின் B டீம்.. திமுக ஆட்சிக்கு வரும் என சொன்ன ஓ.பன்னீர்செல்வத்துடன் எப்படி ஒன்றாக இணைய வேண்டும்.. ஓபிஎஸ் போன்ற துரோகிகளால் தான் கடந்த தேர்தலில் அதிமுகவால் ஆட்சியை கைப்பற்ற முடியாமல் போனது..
கட்சிக்கு யார் துரோகம் செய்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.. செங்கோட்டையனை கட்சியை விட்டு நீக்குவதில் எந்த தயக்கமும் இல்லை.. கட்சியில் உள்ள களைகள நீக்கப்பட்டு விட்டது.. இப்போது அதிமுக எனும் பயிர் செழித்து வளர்ந்து வந்து ஆட்சியை கைப்பற்றும்.. எத்தனை எட்டப்பர்கள் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது..” என்று தெரிவித்தார்..



