2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்ட நிலையில், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இணைந்தனர். அதிமுக கூட்டணியும், பாஜக கூட்டணியும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பாஜக கூட்டணியில் தனி சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வமும் தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. மேலும், தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடும் என்று பாஜக மூத்த தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார். அதேசமயம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் தரப்பு அறிவித்தது. அவரை மீண்டும் என் டி ஏ கூட்டணியில் இணைக்க இபிஎஸ்ஸிடம் நயினார் ஆலோசித்திருந்தார். ஆனால் ஒபிஎஸ் தரப்பை இணைக்க கூடாது என்பதில் இபிஎஸ் உறுதியாக இருக்கிறாராம்.
இதற்கிடையே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ் தரப்பு, தவெகவுடன் இணைய நிறைய வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. விஜயுடன் கூட்டணி வைப்பது குறித்து ஒபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்ததாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
Read more: செக்…! ரூ.20,000-க்கும் மேல் ரொக்கப் பரிமாற்றம்… இனி கட்டாயம்… பத்திர பதிவுத்துறை அதிரடி உத்தரவு…!