விஜயுடன் கைகோர்க்கும் ஓபிஎஸ்..? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு

vijay ops

விஜயின் தவெக கட்சியுடன் ஓபிஎஸ் அணி கூட்டணி அமைப்பது குறித்து இன்று முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது.


2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்ட நிலையில், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இணைந்தனர். அதிமுக கூட்டணியும், பாஜக கூட்டணியும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பாஜக கூட்டணியில் தனி சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வமும் தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. மேலும், தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடும் என்று பாஜக மூத்த தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார். அதேசமயம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஓபிஎஸ் முதல் முறையாக மத்திய அரசுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டிருந்தார். இதன் காரணமாக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகி, தவெகவுடன் இணைய நிறைய வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கிடையே விஜயின் தவெக உடன் அவர் வைக்க பண்ருட்டி ராமச்சந்திரன் அட்வைஸ் கொடுத்தார். இந்த நிலையில் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்த பிறகு தவெக உடன் கூட்டணி அமைப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Read more: “விஜய் நினைத்தது நடக்காது..” பாஜக துணைத் தலைவர் குஷ்பு பேட்டி..! என்ன சொன்னார் தெரியுமா..?

English Summary

OPS to join hands with Vijay..? Important announcement to be released today

Next Post

கோவில்பட்டியின் அடையாள முகம்.. திமுக மூத்த தலைவர் காலமானார்..!! அரசியல் கட்சியினர் இரங்கல்

Thu Jul 31 , 2025
Senior DMK leader R. Bala Subramanian has passed away.
WhatsApp Image 2025 07 31 at 8.25.19 AM

You May Like