மக்கள் மத்தியில் வேகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவதால், சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) செயலியை அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் கட்டாயமாக முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு இன்று ரத்து செய்துள்ளது.
தொடர்புத்துறை (DoT) நவம்பர் 28ஆம் தேதி ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது.. அதில் “ புதிய ஸ்மார்ட்போன்களில் Sanchar Saathi ஆப்பை முன்பே நிறுவ வேண்டும், ஏற்கனவே விற்பனைக்கு வந்துள்ள போன்களிலும் மென்பொருள் அப்டேட் மூலம் இந்த ஆப் சேர்க்கப்பட வேண்டும்” என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
தற்போது அந்த கட்டாய உத்தரவே ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆனால், சஞ்சார் சாத்தி செயலியின் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளதால் இந்த உத்தரவை திரும்ப பெறுவதாக அரசு விளக்கியுள்ளது. ஏற்கனவே 1.4 கோடி பயனர்கள் இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்துள்ளதுடன், ஒரே நாளில் 10 மடங்கு அதிகமான தன்னார்வப் பதிவிறக்கங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
தொடர்புத்துறை (DoT) தனது அறிக்கையில் “பயனாளர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. ஆப்பை கட்டாயமாக நிறுவும் உத்தரவு, குறைந்த விழிப்புணர்வு உள்ள மக்களுக்கும் இது எளிதில் சென்றடைய உதவுவதற்காகவே வெளியிடப்பட்டது.” என்று தெரிவித்தது..
இதற்கிடையில், எதிர்க்கட்சி முன்வைத்த உளவு பார்க்கும் செயலி என்ற குற்றச்சாட்டுகளை மத்திய தொடர்புத்துறை அமைச்சர் ஜ்யோதிராதித்யா சிந்தியா தெளிவாக மறுத்தார். இந்த செயலியில் அது போன்ற உளவு நடவடிக்கைகள் “சாத்தியமே இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்..
அரசின் அறிக்கையில் “அனைத்து குடிமக்களும் இணைய மோசடிகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்பதே நோக்கமாக, கட்டாய்ம் சஞ்சார் சாத்தி செயலியை அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் முன்பே நிறுவ வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இந்த ஆப் மிகவும் பாதுகாப்பானது, மேலும் ஆன்லைன் குற்றவாளிகளிடமிருந்து மக்களை பாதுகாப்பதே இதன் ஒரே நோக்கமாகும்.
இந்த செயலி பயனர்களை பாதுகாக்கிறது, மேலும் பயனர்கள் விரும்பும்போது இந்த செயலியை நீக்கிக் கொள்ளலாம். இதுவரை 1.4 கோடி பயனர்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்; இவர்கள் தினமும் 2000 மோசடி சம்பவங்களை தெரிவிக்க உதவி செய்கிறார்கள்.. ஒரே ஒரு நாளில் 6 லட்சம் பேர் செயலியை பதிவிறக்கத்திற்கு பதிவு செய்துள்ளனர்.. இது 10 மடங்கு அதிகரிப்பு ஆகும் இது, குடிமக்களின் நம்பிக்கை அதிகரித்து வருவதை குறிக்கிறது.. அரசு வழங்கும் இந்த பாதுகாப்பு கருவியை மக்கள் விரும்பி பயன்படுத்துகிறார்கள்..” எனவும் அரசு தெரிவித்துள்ளது.
Read More : “2030க்குள் AI சக்திவாய்ந்ததாக மாறலாம்; மனிதர்களுக்கு மிகவும் ஆபத்து..” Anthropic இணை நிறுவனர் எச்சரிக்கை!



