‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது.. புதிய வரலாறு படைத்த RRR பாடல்…

ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது.. இதில் சிறந்த பாடலுக்கான விருது RRR படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு கிடைத்துள்ளது.. இப்படத்தின் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி நமஸ்தே என்று கூறி ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டார்.. இந்திய தயாரிப்பில் உருவான ஒரு படத்திற்கு சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைப்பது இதுவே முதன்முறையாகும்.. 2009 ஆம் ஆண்டு இதே பிரிவில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் இருந்து ஜெய் ஹோ ஒரு பாடலை வென்ற பிறகு, இந்த மதிப்புமிக்க விருதை வென்ற இரண்டாவது இந்தியப் பாடல் இதுவாகும். ஸ்லம்டாக் மில்லியன் படத்தை வெளிநாட்டு நிறுவனம் தயாரித்திருந்த்து..


முன்னதாக ஆஸ்கர் விருது விழாவில் ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறப்பு பாடலாக இடம்பெற்றது. விருது மேடையில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு அமெரிக்க நடனக் கலைஞரான நடிகை லாரன் காட்லீப் (Lauren Gottlie) உற்சாகமாக நடனமாடினார். இதனால் அரங்கத்தில் இருந்தவர்கள் உற்சாகமாக கைத்தட்டியும், கூச்சலிட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஆஸ்கர் விருது விழாவில், ‘நாட்டு நாட்டு’ பாடல் நேரடியாகப் பாடப்பட்டது. இந்தப் பாடலை பாடிய ராகுல் சிப்லிகுஞ்-சும் காலபைரவாவும் ஆஸ்கர் மேடையில் பாடினர். முன்னதாக, நடிகை தீபிகா படுகோன் ‘நாட்டு நாட்டு’ பாடல் குறித்த அறிமுகத்தை ஆஸ்கர் மேடையில் எடுத்துரைத்தார். பாடல் முடிந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர்.

RRR பல அமெரிக்க விருதுகளைப் பெற்றது.. சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப்ஸ் விருதை வென்றது, மேலும் Critics Choice Awards-ன் 28வது பதிப்பில் சிறந்த பாடல் மற்றும் சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படம் ஆகிய விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

RUPA

Next Post

2 நாட்களில் ரூ.1080 உயர்ந்த தங்கம் விலை.. கடும் அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்...

Mon Mar 13 , 2023
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து, ரூ.42,600க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. எனவே தங்கம் விலை […]
gold

You May Like