மதுபான மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை இன்று மீண்டும் சோதனை நடத்திய நிலையில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா கைது செய்யப்பட்டுள்ளார்.. சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா மீதான மதுபான மோசடியில் தொடர்புடையதாகக் கூறப்படும் பணமோசடி விசாரணை தொடர்பாக, அமலாக்கத்துறை (ED) இன்று மீண்டும் அவரின் வீட்டில் சோதனை நடத்தியது. ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், […]

74 வயதிலும் நடிகர் ரஜினி இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவர் கடைசியாக வேட்டையன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது.. இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினி நடித்துள்ளார். இந்த படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.. இந்த படத்தில் நாகார்ஜுனா, […]

சீமான் செய்து வரும் கோமாளித்தனங்களை இளைஞர்கள் எச்சரிகையுடன் புரிந்து கொள்ள வேண்டும் என்று வன்னி அரசு தெரிவித்துள்ளார் ஆடு மாடுகளுக்கான மாநாட்டை தொடர்ந்து மரங்களுக்கான மாநாடு நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பை விசிக பொதுச்செயலாளர் வன்னி அரசு கடுமையாக விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ நாதக மற்றும் கோனார் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற ஆடு […]

தவெக தலைவர் விஜயுடன் அதிமுக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதா என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதன்படி, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. அதே போல், […]

பஹல்காம் தாக்குதலை நடத்திய தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF)-ஐ ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார். அமெரிக்காவிற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட அவர், இந்த முடிவு இந்தியாவும் அமெரிக்காவும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றாக நிற்கின்றன என்பதை நிரூபித்துள்ளது என்றும் கூறினார். எஸ் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்க பதிவில் “பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து […]

பிரியாணி என்பது உணவு மட்டுமல்ல, அது ஓர் உணர்வு என்று டயலாக் பேசும் அளவுக்கு எல்லோருடைய விருப்ப உணவாகவும் பிரியாணி மாறிவிட்டது. பிரியாணி என்பது அரிசியுடன் இறைச்சி சேர்த்து அனைத்து மசாலாக்களுடன் சேர்த்து தம் போட்டு சமைக்கப்படும் வாசனையும் ருசியும் மிக்க உணவு. இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் பெருநகரங்களிலும் பல்வேறு வகையான பிரியாணிகள் கிடைக்கின்றன. அவை வெவ்வேறு சுவையுடையதாக இருக்கின்றன. இருப்பினும், பிரியாணி சாப்பிட்ட பிறகு, தவிர்க்க வேண்டிய […]