சீனா கட்டும் மெகா அணை ராணுவ அச்சுறுத்தலை விட பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு எச்சரித்துள்ளார்.. அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு PTI செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது பேசிய அவர் “ யார்லுங் சாங்போ நதியில் கட்டப்படும் உலகின் மிகப்பெரிய அணைத் திட்டம், பிரம்மபுத்திரா நதியின் திபெத்திய பெயர், சீனா சர்வதேச நீர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால், அது சர்வதேச விதிமுறைகளுக்குக் […]

திருப்பூரில் அடுத்தடுத்து 4 சிலிண்டர்கள் வெடித்ததில் 42 வீடுகள் தரைமட்டமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் கல்லூரி சாலை எம்.ஜி.ஆர் நகரில் சாயா தேவி என்பவரது இடத்தில் 42 தகரக் கொட்டைகள் அமைத்து தொழிலாளர்கள் தங்கி இருந்தனர். இந்த நிலையில் அந்த பகுதியில் இன்று அடுத்தடுத்து 4 கேஸ் சிலிண்டர்கள் வெடித்தால் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 42 தகரக் கொட்டகை வீடுகள் தரைமட்டமாகின. வட மாநில […]

ராஜஸ்தானில் இந்திய விமானப்படையின் ஜாகுவார் ஜெட் விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் உள்ள பானுடா கிராமம் அருகே செவ்வாய்க்கிழமை ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானதில் 2 இந்திய விமானப்படை (IAF) விமானிகள் உயிரிழந்தனர்.. இந்த சம்பவம் ரத்தன்கர் பகுதியில் நிகழ்ந்தது.. இந்த விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளதாக IAF தெரிவித்துள்ளது. தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்திய […]

பிரிட்டனின் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றான ஹீத்ரோ விமான நிலையத்தில் பணியாற்றும் இந்திய மற்றும் ஆசிய ஊழியர்களை இங்கிலாந்து பெண்மணி சரமாரியாக சாடியிருக்கிறார். அவரின் பதிவு இணையத்தில் விமர்சனங்களை தூண்டியுள்ளது. அந்த பதிவில், “விமான நிலையத்தில் பெரும்பாலான ஊழியர்கள் இந்தியர்கள் அல்லது ஆசியா வம்சா வழியை சேர்ந்தவர்கள் தான் இருக்கிறார்கள். அவர்களை ஆங்கிலத்தில் பேச சொன்னேன். அவர்களை தன்னை ஒரு இனவெறி பிடித்தவர் என்று கூறுகிறார்கள். அவர்கள் ஏன் இங்கிலாந்திற்குள் […]

தமிழக வெற்றிக் கழகம் என்றஅரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள விஜய், 2026-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை குறிவைத்து செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் செயற்குழு கூட்டத்தை கூட்டினார். 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக விஜய் நியமிக்கப்படுவதாக தவெக செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு தவெக தலைமையில் கூட்டணி அமைக்க ஏற்றுக்கொண்ட கட்சிகளுடன் மட்டும் கூட்டணி வைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் […]

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலிருந்து வர்ஜீனியா நோக்கிச் செல்லவிருந்த விமானம் ஒன்றில், 27 வயதான தாஜ் மாலிக் டெய்லர் என்ற பயணி, தன்னுடன் பயணித்த ஒரு நபரிடம், “என் லேப்டாப் ஒரு வெடிகுண்டு” என்று சொல்லியுள்ளார். இதைக் கேட்ட பயணி அதிர்ச்சி அடைந்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டது. எல்லா பயணிகளும் வெளியேற்றப்பட்டு, விமானத்தில் போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் முழு சோதனையும் நடத்தினர். முழு விமானத்தையும் ஆய்வு செய்த […]

எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று கோவையில் மக்களிடையே உரையாற்றிய அவர் “ அறநிலையத்துறையின் நிதியை எடுத்து கல்லூரியை கட்டுவது எந்த விதத்தில் நியாயம்.. அந்த பணம் இவர்களை உறுத்துகிறது.. கோயில் கட்டுவதற்காக உண்டியலில் பணம் போடுகிறீர்கள்.. அது அறநிலையத் […]