தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வந்தாலும், அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட இடங்களில் தினமும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பு […]

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் பாஜகவுக்கு 50 தொகுதி, விஜய்க்கு 50 தொகுதி என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த், நடிகர் கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் கட்சி ஆரம்பித்து, அவர்கள் தேர்தலில் போட்டியிட்ட நிலையில், மிகப்பெரிய தோல்வியைத்தான் சந்தித்தனர். இதையெல்லாம் கருத்தில் கொண்டு, புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட மாட்டார் என்று சொல்லப்பட்டது. முதல்வர் ஆசை விஜய்க்கும், […]

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வுக்கான (COMBINED DEFENCE SERVICES EXAMINATION (II), 2024) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 453 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 17.06.2025க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். காலியிடங்களின் எண்ணிக்கை – 453 காலியிட விவரம்: Indian Military Academy – 100 Indian Naval Academy – 26 Air Force Academy – 32 Officers’ […]

”உங்களுக்கு குழந்தை பிறக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை.. ஆனால், விந்தணு தானம் மூலம் மட்டும் குழந்தையை பெற்றுக் கொள்ளாதீர்கள்” என்று சமூக வலைதளத்தில் ஒரு பெண் கண்ணீர் மல்க பதிவிட்டுள்ளார். ரெடிட் சமூக வலைதளத்தில் பெண் ஒருவர், “விந்தணு தானம் பெற்று நானும் எனது கணவரும் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்தோம். முதலில் எனது கணவர் குழந்தையை பாசத்துடன் வளர்த்து வந்தார். ஆனால், குழந்தைக்கு 2 வயது ஆனவுடன், […]

பாரம்பரிய உணவுகள் குறைந்து, பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிகரித்ததால்தான் இன்று புற்றுநோய் போன்ற மோசமான நோய்கள் அதிகரிக்கின்றன என சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் (IARC – International Agency for Research on Cancer) வலியுறுத்தியுள்ளது. மனிதர்கள் தங்கள் உணவுப் பழக்கங்களில் கவனமில்லாமல் செயல்படுவதால், புற்றுநோயின் அபாயம் அதிகரித்துள்ளது. புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய சில உணவுப் பொருட்களின் பட்டியல் இதோ: மைக்ரோவேவ் பாப்கார்ன்: மைக்ரோவேவ் பாப்கார்னில் ‘பெர்ஃப்ளூரெக்டனிக்’ என்ற அமிலத்துடன் இணைந்து […]

மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத 5 உணவுகள் குறித்து தற்போது பார்க்கலாம்.. மீதமுள்ள உணவை வீணாக்கக் கூடாது என்பதற்காக நம்மில் பலரும் அதனை மீண்டும் சூடாக்கி சாப்பிடுகிறோம்.. இருப்பினும், சில உணவுகளை மீண்டும் சூடுபடுத்துவது அவற்றை நச்சுத்தன்மையடையச் செய்யும் என்பது உங்களுக்கு தெரியுமா.. மீண்டும் சூடுபடுத்துவது, உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை அழிப்பதோடு மட்டுமல்லாமல், புற்றுநோய் உள்ளிட்ட ஆபத்தான நோய்களை உருவாக்க வழிவகுக்கும். இதுபோன்ற சூழ்நிலைகளில் நாம் விழிப்புடன் இருப்பதும், எந்த […]

இன்னும் இரண்டு ஆண்டுகளில், இந்திய சாலைகளின் உள்கட்டமைப்பு, அமெரிக்காவைப் போலவே இருக்கும் என்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், “சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் செலவினங்களை மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். இந்திய சாலைகளின் உள்கட்டமைப்பு ஏற்கனவே மாறிவிட்டதாகவும், நீங்கள் இப்போது பார்ப்பது வெறும் ட்ரெய்லர்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்னும் இரண்டு ஆண்டுகளில், இந்திய […]

முறைப்படி வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, போதிய மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிட நியமனம் என்பது உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கு நாம் தமிழர் கட்சி சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயிர்காக்கும் உயர்ந்த சேவையாற்றும் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகளைத் தொடர்ந்து புறக்கணித்து, அவர்களைப் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ள திமுக அரசு, குறைந்தபட்சம் கொரோனா தொற்றுப் பணியின்போது உயிரிழந்த […]

இந்தியாவில் 163 பேருக்கு XFG என்ற புதிய வகை கோவிட் பாதிப்புகள் இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த மாறுபாடு மிகவும் ஆபத்தானதா ?இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கோவிட்-19 பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. தற்போது கோவிட் பாதிப்பு எண்ணிக்கை 6500ஐ நெருங்கி உள்ளது. இதில் இந்தியாவில் XFG என்ற புதிய வகை கொரோனாவின் 163 பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்று இந்திய SARS-CoV-2 […]

தும்மலை நிறுத்துவது உயிருக்கு ஆபத்தானது. நாம் தும்மும்போது, ​​காற்று நம் நாசித் துவாரங்கள் வழியாக மிக வேகமாகச் செல்கிறது. தும்மலை ஒரு கணம் நிறுத்தினாலும், அதன் அழுத்தம் அனைத்தும் மற்ற உறுப்புகளை நோக்கித் திருப்பி விடப்படுகிறது. தும்மலுக்கு பல காரணங்கள் இருக்கலாம். தூசி, காரமான உணவு, சளி, ஒவ்வாமை, உடல் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவை. தும்மலின் உதவியுடன், மூக்கு உடலை சுத்தம் செய்கிறது. இது ஒரு வகையான ஒவ்வாமை […]