சிவகாசி அருகே வெற்றிலையூரணி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், வெற்றிலையூரணி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று (06.07.2025) காலை சுமார் 8.45 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சிவகாசி வட்டம், […]

இமாச்சல பிரதேசத்தில் ஹட்டி சமூகத்தினர் சமீபத்தில் பழங்குடியினராக அந்தஸ்து பெற்றனர். அங்குள்ள சுமார் 1,300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட டிரான்ஸ்கிரி பகுதியில் 154 பஞ்சாயத்துகள் உள்ளன. இங்கு ஹட்டி சமூகத்தினரை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். மிகவும் ஏழ்மையில் தவிக்கும் இப்பகுதியை சேர்ந்த சில பெண்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களை திருமணம் செய்து வாழ்க்கை நடத்துவதாக வினோத தகவல்கள் வெளியாகி உள்ளன. இங்கு ஹட்டி சமூகத்தினரை […]

திருச்செந்தூர் குடமுழக்கு விழாவை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு ஒரு நாள் விடுமுறை அறிவித்து ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திருச்செந்தூர் வருகை தருவார்கள். மேலும் வெளிமாநிலம் […]

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ஒரே ஆண்டில் 17 ஆயிரத்து 702 பேருக்கு அரசு வேலை வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பணியை எதிர்நோக்கி இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக, டி.என்.பி.எஸ்.சி. மூலம் 17 ஆயிரத்து 595 காலிப்பணியிடங்கள் 2026 ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தது. இந்த நிலையில் ஒரே ஆண்டில் 17 ஆயிரத்து 702 […]

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6, 2025) நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பு என்பது ஒரு இலட்சியம் மட்டுமல்ல, அது நமது பொதுவான நலன்கள் மற்றும் எதிர்காலத்தின் அடித்தளம் என்று பிரதமர் மோடி கூறினார். “மனிதகுலத்தின் வளர்ச்சி அமைதியான மற்றும் […]

கடந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 15-ம் தேதி வரையில் நீட்டித்துள்ளது வருமான வரித்துறை. கடந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 15-ம் தேதி வரையில் நீட்டித்துள்ளது வருமான வரித்துறை. வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பான படிவங்கள் மற்றும் டிடிஎஸ் உள்ளிட்டவற்றில் குறிப்பிடத்தக்க திருத்தங்கள் காரணமாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது […]

2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, 25 தொகுதிகளில் தனி கவனம் செலுத்தி பணிகளை மேற்கொள்ள கட்சி நிர்வாகிகளுக்கு மதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கடந்த முறையைவிட கூடுதல் தொகுதிகளை கேட்போம் என திமுக கூட்டணி கட்சிகள் தொடர்ந்து கூறிவருவது திமுக தலைமையிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கூட்டணி கட்சியில் இருந்து விலகி வருபவர்களை திமுகவில் சேர்ப்பதில்லை என்ற கொள்கையில் இருந்து விலகி, மதிமுக நிர்வாகிகளை சமீபத்தில் […]

கிரிக்கெட் விளையாட்டின் அசகாய சூரன் மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாள் இன்று. அவருக்கு வயது 44. ராஞ்சியில் இருந்து தன் கனவை தேடி புறப்பட்டு வந்த தோனி, பின்னாளில் கோடான கோடி கிரிக்கெட் ரசிகர்களின் கனவுகளை மெய்ப்பிக்க செய்தார். இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்ற பெருமை தோனியையே சேரும். இன்றளவும் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார் தோனி. கிரிக்கெட் விளையாடும் இன்றைய காலத்து […]

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் 1.15 கோடி மகளிர் பயன் பெற்றுள்ளதாகவும், மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 14,45,109 வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைநோக்குப் பார்வையுடன் எண்ணற்ற திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறார். முதல்வரின் தனித்தன்மை வாய்ந்த இத்திட்டங்கள், பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி, சுகாதாரம், ஊரகம், நகர்ப்புர வளர்ச்சி, சமூக […]

பர்மிங்காம் டெஸ்டில் இந்தியாவின் வெற்றியால் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 58 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்தை இந்திய அணி தோற்கடித்துள்ளது. ஆகாஷின் அபார பந்துவீச்சால், 2வது டெஸ்ட் போட்டியின் கடைசி இன்னிங்ஸில் இங்கிலாந்தை வெறும் 271 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியது இந்திய அணி . இந்த போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஆகாஷ் […]