பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 4500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 202 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. காலிப்பணியிடங்கள்:  4500 பணியிடங்கள் காலியாக உள்ளன. கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: குறைந்தபட்சம் 20 வயது முலத்  28 வயதுக்குள் இருக்க வேண்டும். […]

பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க கணவனின் கையெழுத்தோ, அனுமதியோ அவசியம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒரு பெண் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும்போது, அவளது கணவனின் கையெழுத்தோ, அனுமதியோ அவசியம் என்பதை நிர்வாக அதிகாரிகள் வற்புறுத்துவது, சட்டரீதியாக தவறு மட்டுமல்ல, சமூகநீதி மீதான புறக்கணிப்பும் கூட. இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கும் வகையில், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சிறந்த முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. கணவரின் கையெழுத்தை வற்புறுத்தாமல் பாஸ்போர் […]

மத்திய கிழக்கு பகுதியில் ஈரானும் இஸ்ரேலும் இடையே நடக்கும் ஏவுகணை மற்றும் சைபர் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. இந்தச் சைபர் போர்களால் நேரடியாகத் தாக்கப்படாத மூன்றாம் நாடுகளும் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பரவலான தாக்கத்திற்கே “ஸ்பில்ஓவர் எஃபக்ட் (Spillover Effect)” என பெயர். அந்த வகையில், இந்தியா போன்ற நாடுகளும் இந்த தாக்கங்களால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதால், தனிநபர்களாகவும், நிறுவனங்களாகவும் அதிகம் எச்சரிக்கையாக […]

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனியை அழிப்பதாக இஸ்ரேல் அச்சுறுத்தியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஈரான் சமீபத்தில் ஒரு இஸ்ரேலிய மருத்துவமனையை ஒரு கொடிய கிளஸ்டர் குண்டால் தாக்கியுள்ளது. கிளஸ்டர் குண்டு என்றால் என்ன? கிளஸ்டர் குண்டு என்பது ஒரு […]

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வந்த நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தொடங்கி ஜூன்.26ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை […]

பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் தூய்மை பணியில் ஈடுபட்ட, தூய்மை பணியாளர்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள சுற்றுலா தலங்களை பார்ப்பதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள், சுற்றுலா தலங்களை கண்டு களித்து வருகின்றனர் அந்த வகையில் சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் சுற்றுலா தளங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள சென்னை பெருநகர […]

இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார ஊடக அதிபர்களில் ஒருவரான சன் டிவி நெட்வொர்க்கின் தலைவர் கலாநிதி மாறன் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார். ஆனால் இந்த முறை, அவரின் மிகப்பெரிய சம்பளத்திற்காக அல்ல. தனது இளைய சகோதர் தயாநிதி மாறன் அனுப்பிய நோட்டீஸ் காரணமாக.. திமுக எம்.பி. தயாநிதி மாறன், தனது மூத்த சகோதரருக்கு சட்டப்பூர்வ அறிவிப்பை அனுப்பியுள்ளார். 2003 ஆம் ஆண்டு தங்களின் தந்தையும் ஊடக அதிபர் முரசொலி மாறனின் […]