பசும்பொன் முத்துராமலிங்கதேவரின் நேரடி வாரிசுகள் நாங்கள் தான், அவரது சொத்துக்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கமுதியை சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். கமுதி அருகே மேலராம நதி கிராமத்தை சேர்ந்த சிலர் ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: சுதந்திர போராட்ட வீரர் உ.முத்துராமலிங்க தேவரின் தந்தை உக்கிரபாண்டித்தேவருக்கு இந்திராணி, நாகம்மாள்என இரு மனைவிகள் இருந்தனர். இந்திராணியின் மகன் முத்துராமலிங்க தேவர் திருமணம் […]

நடிகை வனிதா விஜயகுமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ படத்திற்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா வழக்குத் தொடர்ந்துள்ளார். கடந்த 1995-ம் ஆண்டு வெளியான விஜயின் ‘சந்திரலேகா’ திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். நடிகர் விஜயகுமாரின் மகளாக இவர், சமீபகாலமாக டிவி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார். தற்போது பவர் ஸ்டாருடன் இணைந்து ‘பிக்கப் ட்ராப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் இன்னும் வெளியாகாமல் […]

ரூ.50 நாணயம் பற்றிய முக்கிய தகவலை மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது இந்தியாவில் ரூ.1,ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.20 ஆகிய நாணயங்களும், ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500 நோட்டுகளும் புழக்கத்தில் உள்ளன. இந்த நிலையில் ரூ.50 நாணயம் பற்றிய முக்கிய அப்டேட் வந்துள்ளது. நீண்ட நாட்களாகவே புதிய ரூ.50 நாணயம் சந்தையில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியான வண்ணம் உள்ளன.. ஆனால் இப்போது, ​​₹50 நாணயத்தை அறிமுகப்படுத்தும் […]

8வது ஊதியக் குழுவில் அரசு ஊழியர்களுக்கு 54% வரை சம்பள உயர்வு இருக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனவரி மாதம் 8வது ஊதியக் குழு தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.. எனினும் இந்த ஊதியக் குழு இன்னும் அமைக்கப்படவில்லை. ஆனால், ஃபிட்மென்ட் காரணி தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.. இந்த நிலையில் நிதிச் சேவை நிறுவனமான அம்பிட் கேபிடல் வெளியிட்டுள்ள அறிக்கை, புதிய ஊதியக் குழு […]

அதிமுக சார்பில் “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” தேர்தல் சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ள எடப்பாடி பழனிசாமி, கோவை வடவள்ளி பேருந்து நிலையம் முன்பு பொதுமக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசுகையில், கோயிலை கண்டாலே திமுகவுக்கு கண்ணு உறுத்துகிறது. அதிலிருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து கல்லூரி கட்ட ஆரம்பிக்கிறார்கள். இது எப்படி நியாயம், தெய்வபக்தி படைத்த மக்கள் எதற்காக கோயில் உண்டியலில் பணத்தை போடுகிறார்கள், கோவிலை மேம்படுத்ததானே.. ஆனால் அறநிலையத்துறை மூலம் கோவிலுக்கு வரும் […]

எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை. நாம் அனைவரும் இணைந்து உழைத்து புதிய வரலாற்றை படைப்போம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பாமக தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.. அந்த கடித்தத்தில் “ என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களின் குரலாகவும், ஊமை சனங்களின் பாதுகாவலனாகவும் திகழ்ந்து கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி வரும் ஜூலை 16&ஆம் நாள் […]

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த விவகாரத்தில், பயற்சி மருத்துவர் சிகிச்சை அளித்த காரணத்தினால்தான் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். முத்தக்கவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி யோகப்பிரியா பிரசவத்திற்காக, கரூர் அரசு மருத்துவமனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பிரசவத்திற்கு பின் கர்பப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் பின் அடுத்த, இரண்டு தினங்களில் யோகப்பிரியா உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், நீதி […]