தொழில்நுட்ப உலகின் முன்னணி நிறுவனங்களான மைக்ரோசாப்ட் மற்றும் மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் எடுத்த சமீபத்திய முடிவுகள், ஆயிரக்கணக்கான ஊழியர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளன. செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் தடம் பதிப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் ஊழியர்களைப் பெரும் சுமையில் ஆழ்த்தியுள்ளன. இந்தச் சூழலில், பெரும் முதலீடுகளும் அதிகரித்த செலவுகளும் இந்த நிறுவனங்களைக் கடினமான முடிவுகளை எடுக்கத் தூண்டியுள்ளன. செலவுகளைக் குறைப்பதற்காக, இந்த இரண்டு பெரும் நிறுவனங்களும் சுமார் 23,000 ஊழியர்களைப் பாதிக்கும் திட்டங்களை […]

ஆதார் ஒரு மிக முக்கியமான ஆவணமாகும். எனவே, அது தவறாகப் பயன்படுத்தப்படாமல் பாதுகாப்பது நமது பொறுப்பாகும். சமீபகாலமாக, இந்த அட்டையின் வாயிலாக நடைபெறும் முறைகேடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர், கைரேகைகளைச் சேகரித்து அவற்றை நகலெடுப்பதன் (cloning) மூலம் குற்றங்களை இழைத்து வருகின்றனர். உங்கள் தனிப்பட்ட விவரங்கள் கசிந்தால், உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. எனவே, ஆதார் அட்டையை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க […]

வாட்ஸ்அப் (WhatsApp) இப்போது இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு ப்ரீபெய்ட் மொபைல் ரீசார்ஜ் சேவையை வழங்குகிறது. இந்த புதிய அம்சம் PayU உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு மற்றும் iOS போன்களில் கட்டம் கட்டமாக வெளியிடப்பட்டு வருகிறது. அடுத்த சில வாரங்களில் இது அனைவருக்கும் கிடைக்கும் என்று ஓர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Meta மற்றும் PayU வெளியிட்ட ஓர் கூட்டறிக்கையின்படி, இந்த அம்சத்தின் மூலம், பயனர்கள் தங்களது மொபைல் எண்களையும், […]

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் சட்டமன்றத் தேர்தல் அட்டவணை கடந்த மாதம் (மார்ச்) 15ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன் படி, கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.. மேற்குவங்கத்தை பொறுத்த வரை 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.. நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.. […]