கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கேரள மாநிலத்தில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த வழக்கில் பகவால் சிங் மற்றும் அவரது மனைவி லைலா மற்றும் அகமது முகமது ஷபி 3 பேர் […]
கனமழை காரணமாக விடுமுறை அளிக்குமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு மாணவர்கள் அனுப்பிய குறுஞ்செய்திகள் தற்போது வைரலாகி வருகிறது. தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழை காரணமாக பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களின் நலன்கருதி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து வருகின்றனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாணவர்கள் […]
பாம்பு கடித்து உயிரிழந்த சிறுவனின் உடலை, வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் முன்வராததால், தந்தையே தனது தோளில் சுமந்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் தேவைகளை நிறைவேற்றவே அரசு ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால், பல சமயங்களில் அதனை மறந்து சில அரசு ஊழியர்கள் நடந்து கொள்கின்றனர். அந்த வகையில், திருப்பதி மாவட்டத்தை அடுத்து கே.வி.பி.புரம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் செஞ்சய்யா. இவர் அதே […]
சென்னையில் உயர்ந்து வரும் கடல்மட்டத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் நகரின் 29 சதவீத பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கலாம் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா உள்பட உலக நாடுகள் அனைத்தும் சந்தித்து வரும் முக்கிய பிரச்சனைகளில் முதன்மையானதாக காலநிலை மாற்றம் மாறியுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் பல முக்கிய நகரங்கள் எதிர்காலத்தில் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு இந்தியா ஒன்றும் விதிவிலக்கல்ல. உயர்ந்து வரும் […]
நாட்டில் சில பகுதிகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவி வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். 5 நாள் பயணமாக அங்கு அவர், சர்வதேச நிதி ஆணையம், உலக வங்கி ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். ஜி-20 நிதியமைச்சர்கள் உடன் பேச்சுவார்த்தை, மத்திய வங்கி ஆளுநருடன் பேச்சுவார்த்தை, அடுத்ததாக, ஜப்பான், தென்கொரியா, சவூதி அரேபியா, […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இனத்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 2,139 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 13 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3,884 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]
நாம் அனைவருக்கும் மிகவும் கஷ்டமாக உள்ள ஒரு விஷயம் என்னவென்றால், அது நமது துணிகளை எப்படி தூய்மையாகவும், எப்போதும் புதியதுப்போலவும் வைத்துக்கொள்ளுவது என்பதுதான் அதற்கான சில டிப்ஸ் பற்றித்தான் இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம். அப்படி என்ன டிப்ஸ் என்றுதானே யோசிக்கிறீர்கள்..! இந்த பதிவை முழுதாக படித்தால் உங்களுக்கே புரியும். இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் ஜீன்ஸ் பேண்ட், ஜீன்ஸ் சட்டை போன்ற ஆடைகளை பயன்படுத்துகிறோம் அப்படி பயன்படுத்தும் ஆடைகளில் உள்ள […]
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு படி பல காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் மூலம் 14.11.2022 அன்று அல்லது அதற்கு முன் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புப்படி கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் […]
ஓட்டல் அறையில் போதைப் பொருள் கொடுத்து பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு டெல்லி, ஆதர்ஷ் நகரில் உள்ள தனியார் ஓட்டலில் 32 வயது பெண் ஒருவர், போதைப் பொருள் கொடுத்து தன்னை 3 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாகப் புகார் அளித்துள்ளார். டெல்லி ஆதர்ஷ் நகரில் உள்ள காவல் நிலையத்தில் இப்பெண் முன்னதாக புகார் அளித்துள்ள நிலையில், ராஜஸ்தான் […]
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Resolver பணிகளுக்கு என மொத்தம் 47 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 63 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு தொடர்பு உடைய பாடபிரிவில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி டிகிரி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் தேவை. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000 […]