சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், உலக மக்களை பாடாய்படுத்தியது. இந்த வைரஸ் தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது குறைந்துள்ள நிலையில், மிக வேகமாக பரவும் திறன் கொண்ட 2 புதிய […]
மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் தப்பியோடிய தாதா தாவூத் இப்ராகிமின் டி நிறுவனத்துடன் தொடர்புடைய 5 பேரை மும்பை குற்றப்பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர். சலீம், கேங்ஸ்டர் சோட்டா ஷகீல் மற்றும் ரியாஸ் பதி ஆகியோரின் நெருங்கிய உதவியாளரும் ஆவார். ரூ. 62 லட்சம் மிரட்டி பணம் பறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும், சோட்டா ஷகீலின் உறவினருமான சலீம், அக்டோபர் 6ஆம் தேதி வரை மும்பை குற்றப்பிரிவு நீதிமன்ற […]
மலையாள திரையுலகில் இணை இயக்குனரும், நடிகருமான தீபு பாலகிருஷ்ணன், கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் தீபு பாலகிருஷ்ணன் (41). இவர் கடந்த 10ஆம் தேதி அப்பகுதியில் உள்ள, இரிஞ்சாலக்குடாவில் உள்ள கூடல்மாணிக்யம் கோயிலின் தெற்குக் குளத்தில் காலை 5 மணியளவில் குளிக்க சென்றுள்ளார். அப்போது, நீண்ட நேரம் ஆகியும் தீபு பாலகிருஷ்ணன் வீடு திரும்பவில்லை. இதனால், அவருடைய நண்பர்களிடம் […]
ஆஸ்கர் விருதுக்கு தேர்வான “செல்லோ ஷோ” படத்தில் நடித்த சிறுவன் திடீர் மரணமடைந்ததால் திரையுலகினர் அதிர்ச்சியிலும், சோகத்திலும் உள்ளனர். இந்தியா சார்பில் 95-வது ஆஸ்கர் திரைப்பட விழாவிற்கு தேர்வான ‘செல்லோ ஷோ’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள ராகுல் கோலி திடீரென உயிரிழந்தார். இப்படத்தில் 6 சிறுவர்களில் ஒருவராக நடித்த ராகுல் கோலி, லுகேமியா எனும் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், புற்றுநோய் மருத்துவமனையில் கடந்த 4 […]
தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலைமையில் கடலூர்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ”வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், அதற்காக கடலூர் மாவட்டத்தை தயார்படுத்துவதற்காக முதலமைச்சர் முக.ஸ்டாலின் எங்களை இங்கு அனுப்பியுள்ளார். பொதுவாக கடலூர் மாவட்டம் மழை, வெள்ளம், புயல் […]
பெண் பயணியை விரட்டிச் சென்று மினி பஸ் டிரைவர்கள் இருவர் காதல் தொல்லை கொடுத்ததால் , அந்தப்பெண் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குமரியில் அரங்கேறி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை அடுத்த காரியாவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த குமார்-சுஜிலா தம்பதி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுஜிலா பார்மசிஸ்ட் ஆக வேலை பார்த்து வருகிறார். கடந்த சனிக்கிழமை பணி முடிந்து வீட்டிற்கு வந்த […]
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, சுழல் வாழ்க்கைச் செலவு மற்றும் பொருளாதாரச் சரிவு போன்றவற்றின் வீழ்ச்சியால் நாடுகள் சிக்கித் தவிப்பதால், அடுத்த ஆண்டு உலக வளர்ச்சி மேலும் குறையும் என்று சர்வதேச நாணய நிதியம் செவ்வாயன்று கூறியது. உலகப் பொருளாதாரம் பல அடிகளைச் சந்தித்துள்ளது என்றும், கொரோனா வைரஸ் வெடித்ததைத் தொடர்ந்து உக்ரைனில் நடந்த போரால் உணவு மற்றும் எரிசக்தி விலைகள் அதிகரித்துள்ளன, அதே நேரத்தில் உயரும் செலவுகள் மற்றும் […]
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி, இந்த வருடத்தில் இந்திய அணி பெறும் 38-வது வெற்றியாகும். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடர் 2 போட்டிகள் மட்டுமே நடைபெற்ற நிலையில் 1-1 என்ற கணக்கில் […]
தமிழகத்தில் இன்று 26 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், […]
கௌரவ விரிவுரையாளர்களை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய அரசு உத்தரவிடவில்லை என உயர்கல்வித்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டால் அவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கல்லூரி கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு […]