பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசையில் இருவரை ஏமாற்றி அழைத்துச் சென்று நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணக்காரர்கள் ஆக வேண்டும் என்ற ஆசையில் லைலா மற்றும் பகவந்த் சிங் என்ற தம்பதி 2 பெண்களை கடத்திச் சென்று நரபலி கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து பத்தனம்திட்டாவிற்கு விரைந்துள்ள காவல்துறையினர், நரபலியில் புதைக்கப்பட்ட 2 பெண்களின் உடல்களை தோண்டி எடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த பெண்கள் கொச்சியில் […]
புறநகர் ரயில்களில் ஏ.சி. பெட்டிகளை இணைத்து இயக்குவது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.. சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகள் மற்றும் புறநகரில் உள்ள பகுதிகளை இணைக்கும் வகையில் சபர்பன் எனப்படும் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி , சென்னை கடற்கரை முதல் தாம்பரம் , சென்னை கடற்ரை முதல் வேளச்சேரி , சென்னை கடற்கரை […]
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இரண்டாவது நாளுக்கான 2-வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கிய நிலையில், போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வரவழைக்கப்பட்டு, அவர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பும் வழக்கமான நடைமுறையை நிறைவேற்றினார் கமல். தனி அறிமுக வீடியோ, போட்டியாளர்களின் பங்கேற்பு லட்சியம் என அனைத்தும் முடிந்து ஒரு வழியாக முதல்நாள் போட்டி தொடங்கிவிட்டது. வழக்கமாக போட்டி தொடங்கினால், முதல் வாரம் கொஞ்சம் ரிலாக்ஸேசன் இருக்கும். ஆனால், இந்த […]
பிக்பாஸ் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, யாரோ சிரிப்பது போன்ற சத்தம் கேட்டதாக நடிகை ரச்சிதா கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்கின் விதிமுறையின்படி போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிவா, குயின்ஸி, ஜனனி மற்றும் விக்ரமன் ஆகிய நால்வர் வீட்டிற்கு வெளியே தூங்கினார்கள். இரவு முழுவதும் தூங்காமல், கொசுக்கடியால் அவர்கள் எப்போது விடியும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அதே சமையம் வீட்டிற்குள் இருந்து போட்டியாளர்கள் நன்றாக […]
எம்ஜிஆரின் பூர்வீக வீட்டில் உள்ள அவரது தாய், தந்தையின் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். இளமைக் காலத்தில் நாடக நடிகராக இருந்து பின் திரைத்துறையில் கால்பதித்த எம்ஜிஆர், அதிலும் உச்சம் தொட்டார். திரைத்துறையில் இருந்தபோதே மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலில் கால் பதித்த அவர், தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக பின்னாளில் உருவாகினார். அண்ணாவின் மறைவிற்கு பின் திமுகவின் செயல்பாடுகளில் ஏற்பட்ட கருத்து மோதலினால் அதிலிருந்து நீக்கப்பட்டு பின் […]
தமிழகத்தில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த, முக்கிய பொழுதுபோக்கு சேனல் ஒன்றை விரைவில் நிறுத்த சன் குழுமம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் சீரியல்கள் என்றாலே, அது சன் டிவி தான். அதேபோல் ரியாலிட்டி ஷோ என்றால் விஜய் டிவி. இப்படி ஒவ்வொரு சேனலும், ஒரு தனித்துவ இடத்தை மக்கள் மத்தியில் பெற்றுள்ளது. அந்த வகையில் சன் குழுமத்தின் மூலம் ஒளிபரப்பாகும் ஆதித்யா, சன் நியூஸ், […]
தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதற்கிடையே, மழைக்கால நோய்களும் மக்களை பாதிக்கச் செய்துள்ளது. கொசுக்களால் தான் அதிகளவு நோய் ஏற்படுகிறது. இந்த சமயத்தில் சளி, காய்ச்சலால் இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. சுகாதாரமாக இருந்தால் இப்பிரச்னையை தவிர்க்கலாம். ஒருவேளை காய்ச்சல் வந்தவர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை… * […]
வடதமிழக பகுதிகளின் மேல் நிலவக்கூடிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக கடந்த ஒரு சில தினங்களாகவே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் தாக்கத்தின் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு பரவலான இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த முன் அறிவிப்பின் அடிப்படையில், […]
இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளரான கே.பி.முனுசாமி பங்கேற்காதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டது. இதனால், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையே நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதுமே ஓபிஎஸ், வைத்தியலிங்கம் மற்றும் […]
கடந்த 5 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றுக்குள் இருந்த கத்தரிக்கோலை, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். தற்போது மருத்துவத்துறையில் வியக்கத்தக்க முன்னேற்றங்கள், தொழில்நுப்டங்கள் வந்து விட்டன. ஆனாலும், சில மருத்துவர்களின் அலட்சியம், கவனக்குறைபாடு காரணமாக சில நேரங்களில் அவ்வப்போது தவறுகள் நிகழ்ந்து விடுகின்றன. அந்த வகையில், கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரி பகுதியில் வசித்து வருபவர் இளம் பெண் ஹர்சீனா. இவருக்கு வயது 30 . இவருக்கு கடந்த […]