யோயோ ஆப் மூலம் பெண்களிடம் பழகி அந்தரங்க புகைப்படங்களை பெற்று மிரட்டி பணம் பறித்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினரிடம், கோவையை சேர்ந்த பெண் ஒருவர் ஒரு புகார் மனு அளித்தார். அதில் “யோயோ என்ற ஆன்லைன் இணையதள ஆப் மூலம் தன்னுடன் பழகிய நபர், தனது அந்தரங்க போட்டோ மற்றும் வீடியோக்களை பெற்று அதை ஆன்லைனில் பரப்பி விடுவேன் எனக் கூறி […]

64 வயதான ஓய்வுபெற்ற வங்கி அதிகாரிக்கு நிர்வாண வீடியோ கால் செய்த பெண் ஒருவர் அதனை ரெக்கார்ட் செய்து, மிரட்டி அவரிடம் ரூ.17.8 லட்சம் மோசடி செய்துள்ளார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி ஒருவருக்கு வாட்ஸ்-அப்பில் ஒரு பெண்ணிடம் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. சிறிது நேரம் சாதாரணமாக சென்ற பேச்சு, திடீரென ஆபாசமாக மாறியது. சில மெசேஜுகள் அனுப்பிய பின், அந்த பெண் வீடியோ கால் செய்துள்ளார். […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இனத்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 1,957 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 08 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3,884 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

நடிகர் சூர்யாவின் ’சூரரைப் போற்று’ திரைப்படம் 8 ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்று மீண்டும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. மாறுபட்ட கதைக்களங்களில் நடித்து ரசிகர்களின் எண்ணிக்கையை பெருக்கியவர். இவரது திரைப்பயணத்தில் முக்கிய திரைப்படமாக அமைந்தது ‘சூரரைப் போற்று’. கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான இப்படம் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகியது. கதாநாயகியாக அபர்ணா பாலமுரளியும், முக்கிய […]

”முன்னாள் அமைச்சரும், கேரள சட்டசபையில் முக்கிய நபராக இருந்தவருமான ஒருவர் என்னை உல்லாசத்திற்கு வருமாறு பலமுறை அழைத்துள்ளார்” என்று சொப்னா பரபரப்பை கிளப்பியுள்ளார். திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில், முக்கிய புள்ளியாக கருதப்படுபவர் சொப்னா. இந்த கடத்தல் தொடர்பாக சுங்க இலாகா, என்ஐஏ, மத்திய அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தியது. சொப்னா விவகாரம் கடந்த சில மாதமாக ஓய்ந்திருந்த நிலையில், தற்போது அவர் எழுதி உள்ள சுயசரிதை, […]

மழை காரணமாக திருப்பத்தூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வட தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் […]

மனைவியின் தவறான உறவை கண்டித்த இரும்பு வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வட்டாலூர் கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன். இவருடைய மகன் முத்துராமலிங்கராஜன் (45). பழைய இரும்பு வியாபாரியான இவருக்கு உஷா என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், முத்துராமலிங்கராஜனுக்கும், உஷாவிற்கும் கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். உஷா தனது தாயுடன் ஏ.பி.நாடனூரில் […]

லிப்ட் கேட்ட கல்லூரி மாணவியை காருக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்புரின் ஜெய்சிங்பூர் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் 23 வயதான மாணவி ஒருவர் பி.டெக் படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 7) அன்று மாலை கல்லூரி வகுப்பை முடித்து விட்டு மாணவி வீடு திரும்பியுள்ளார். அப்போது, சாலையில் சென்று […]

ஆலந்தூரில் பட்டாக்கத்தியுடன் ரவுடிகள் வாகனங்களை தாக்கியும், பொதுமக்களை வெட்டியதாலும் பெரும் பதற்றம் ஏற்பட்டது. சென்னையின் முக்கிய பகுதியான ஆலந்தூரில் நேற்று நள்ளிரவில் திடீரென இருபதுக்கும் மேற்பட்ட ரவுடி கும்பல் ஒன்று சாலைகளில் பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்துள்ளன. அப்போது, அந்த ரவுடி கும்பல் சாலைகளில் நின்று கொண்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளது. மேலும், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை அவர்கள் பட்டாக்கத்தியால் வெட்டி காயம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த […]

தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் சார்பாக அனுப்பி உள்ள செய்திக் குறிப்பில் சென்னையில் 8-ம் தேதி மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட உள் நோயாளிகள் வளாகத்தின் மூன்றாவது தளத்தின் ஒரு சிறு பகுதியில் உள்ள மேற்கூரை இடிந்து விழுந்தது. அந்த பிரிவில் நோயாளிகள் யாரும் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை, அந்த வளாகத்தில் எதிர் திசையில் அமைந்துள்ள அறையில் ஆறு நோயாளிகள் இருந்தனர். விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் எந்த நோயாளிக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. […]