தமிழகத்தில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த, முக்கிய பொழுதுபோக்கு சேனல் ஒன்றை விரைவில் நிறுத்த சன் குழுமம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் சீரியல்கள் என்றாலே, அது சன் டிவி தான். அதேபோல் ரியாலிட்டி ஷோ என்றால் விஜய் டிவி. இப்படி ஒவ்வொரு சேனலும், ஒரு தனித்துவ இடத்தை மக்கள் மத்தியில் பெற்றுள்ளது. அந்த வகையில் சன் குழுமத்தின் மூலம் ஒளிபரப்பாகும் ஆதித்யா, சன் நியூஸ், […]
தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதற்கிடையே, மழைக்கால நோய்களும் மக்களை பாதிக்கச் செய்துள்ளது. கொசுக்களால் தான் அதிகளவு நோய் ஏற்படுகிறது. இந்த சமயத்தில் சளி, காய்ச்சலால் இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. சுகாதாரமாக இருந்தால் இப்பிரச்னையை தவிர்க்கலாம். ஒருவேளை காய்ச்சல் வந்தவர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை… * […]
வடதமிழக பகுதிகளின் மேல் நிலவக்கூடிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக கடந்த ஒரு சில தினங்களாகவே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் தாக்கத்தின் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு பரவலான இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த முன் அறிவிப்பின் அடிப்படையில், […]
இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளரான கே.பி.முனுசாமி பங்கேற்காதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டது. இதனால், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையே நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதுமே ஓபிஎஸ், வைத்தியலிங்கம் மற்றும் […]
கடந்த 5 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றுக்குள் இருந்த கத்தரிக்கோலை, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். தற்போது மருத்துவத்துறையில் வியக்கத்தக்க முன்னேற்றங்கள், தொழில்நுப்டங்கள் வந்து விட்டன. ஆனாலும், சில மருத்துவர்களின் அலட்சியம், கவனக்குறைபாடு காரணமாக சில நேரங்களில் அவ்வப்போது தவறுகள் நிகழ்ந்து விடுகின்றன. அந்த வகையில், கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரி பகுதியில் வசித்து வருபவர் இளம் பெண் ஹர்சீனா. இவருக்கு வயது 30 . இவருக்கு கடந்த […]
யோயோ ஆப் மூலம் பெண்களிடம் பழகி அந்தரங்க புகைப்படங்களை பெற்று மிரட்டி பணம் பறித்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினரிடம், கோவையை சேர்ந்த பெண் ஒருவர் ஒரு புகார் மனு அளித்தார். அதில் “யோயோ என்ற ஆன்லைன் இணையதள ஆப் மூலம் தன்னுடன் பழகிய நபர், தனது அந்தரங்க போட்டோ மற்றும் வீடியோக்களை பெற்று அதை ஆன்லைனில் பரப்பி விடுவேன் எனக் கூறி […]
64 வயதான ஓய்வுபெற்ற வங்கி அதிகாரிக்கு நிர்வாண வீடியோ கால் செய்த பெண் ஒருவர் அதனை ரெக்கார்ட் செய்து, மிரட்டி அவரிடம் ரூ.17.8 லட்சம் மோசடி செய்துள்ளார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி ஒருவருக்கு வாட்ஸ்-அப்பில் ஒரு பெண்ணிடம் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. சிறிது நேரம் சாதாரணமாக சென்ற பேச்சு, திடீரென ஆபாசமாக மாறியது. சில மெசேஜுகள் அனுப்பிய பின், அந்த பெண் வீடியோ கால் செய்துள்ளார். […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இனத்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 1,957 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 08 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3,884 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]
நடிகர் சூர்யாவின் ’சூரரைப் போற்று’ திரைப்படம் 8 ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்று மீண்டும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. மாறுபட்ட கதைக்களங்களில் நடித்து ரசிகர்களின் எண்ணிக்கையை பெருக்கியவர். இவரது திரைப்பயணத்தில் முக்கிய திரைப்படமாக அமைந்தது ‘சூரரைப் போற்று’. கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான இப்படம் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகியது. கதாநாயகியாக அபர்ணா பாலமுரளியும், முக்கிய […]
”முன்னாள் அமைச்சரும், கேரள சட்டசபையில் முக்கிய நபராக இருந்தவருமான ஒருவர் என்னை உல்லாசத்திற்கு வருமாறு பலமுறை அழைத்துள்ளார்” என்று சொப்னா பரபரப்பை கிளப்பியுள்ளார். திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில், முக்கிய புள்ளியாக கருதப்படுபவர் சொப்னா. இந்த கடத்தல் தொடர்பாக சுங்க இலாகா, என்ஐஏ, மத்திய அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தியது. சொப்னா விவகாரம் கடந்த சில மாதமாக ஓய்ந்திருந்த நிலையில், தற்போது அவர் எழுதி உள்ள சுயசரிதை, […]