பனை மரம் ஏற கருவி கண்டுபிடித்தால் ரூ.1 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நமது மாநில மரமான பனை மரத்தின் சாகுபடியை ஊக்குவித்து, பனை மரங்களை நம்பி வாழும் வேளாண் பெருமக்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்கு, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2021-22 ஆம் ஆண்டில் பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ்,76 இலட்சம் பனை விதைகளும், ஒரு இலட்சம் பனங்கன்றுகளும் […]
ஆசிரியர் தகுதித்தேர்விற்கு விண்ணப்பித்த 39 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது அறிவிப்பில்; பாலிடெக்னிக் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு ஆசிரியர் தகுதித்தேர்விற்கு விண்ணப்பித்த 4 பேரின் விண்ணப்பங்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் புகைப்படம், கையெழுத்து சரியாக இல்லாத 12 பேரின் விண்ணப்பமும், தேர்வர்களின் பெயர்களை சரியாக பூர்த்திச் செய்யாத 23 பேர் என 39 பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு […]
பதிவுத் துறை அதிக ஆவணங்களை பதிவு செய்ய இடமளிக்க துணைப் பதிவாளர் அலுவலகங்களில் தட்கல் டோக்கன் முறையை தமிழக அரசு சமீபத்தில் அறிமுகம் செய்தது. துணைப் பதிவாளர் அலுவலகங்களில் தினசரி வழங்கப்படும் வழக்கமான டோக்கன்களுக்கு கூடுதலாக தத்கலில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய டோக்கன் ஸ்லாட் முறையில், அதிக எண்ணிக்கையிலான துணைப் பதிவாளர் அலுவலகங்களில் 200 டோக்கன்களும், பிற துணைப் பதிவாளர் அலுவலகங்களில் 100 டோக்கன்களும் வழங்கப்படுகின்றன. பதிவுத்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் […]
TNPSC எழுத்துத் தேர்வு நிர்வாகக் காரணங்களால் தற்போது சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் கிரண்குராலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய தொழில் ஆலோசகர், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய சமூக மேம்பாட்டு பணியில் அடங்கிய சமூக அலுவலர் பதவிகளுக்கான கம்ப்யூட்டர் வழித் தேர்வு நவம்பர் 12, 13 […]
அன்றாட வாழ்க்கைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெற சரிவிகித உணவு உண்ண வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்கள் சரிவிகித உணவு உட்கொண்டால் தான் வயிற்றில் உள்ள சிசுவிற்கும் போதுமான ஊட்டச்சத்து கிடைக்கும். இருப்பினும், உணவை பொருத்தமட்டில் எதை உண்ணலாம் எதை தவிர்க்கவேண்டும் என்ற சந்தேகம் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படுவது வழக்கம். போதுமான ஊட்டச்சத்து எடுத்துக்கொள்ள தவறினால் சிசுவிற்கு பிறவி குறைபாடுகள் ஏற்படக்கூடும். குழந்தைகள் எடை குறைவாக பிறப்பதற்கு ஊட்டச்சத்து குறைபாடு முக்கிய காரணமாகும். எடை […]
மாதவிடாய் சுழற்சி மாதமாதம் சீராக இல்லாமல் தாமதமாக வெளியாதல் போன்ற நிலை இருந்தால் சினைப்பையின் ஹார்மோன் குறைவினால் விடாய் தாமதம் ஏற்படும். மாதம் ஒரு சினை முட்டையை சினைப்பை விடுவிப்பது இயற்கையான நிகழ்வு. இந்நிகழ்வில் தடை ஏற்படும் போது சினைப்பையில் சிறு, சிறு, நீர் கட்டி தோன்றி விடுகின்றன. சினைப்பை நீர்கட்டி என்பது நோயல்ல, குறைபாடுதான் சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தால் உண்டாகும் இந்த பிரச்சனை பல்வேறு வயதிலுள்ள பெண்களை பாதிக்கலாம். அந்தந்த […]
தமிழ் சினிமாவின் காதல் மன்னன் என்று 70, 80 களில் புகழப்பட்டவர் ஜெமினி கணேசன். தன்னுடை நடிக்கும் நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்வதில் அனைவரையும் மிஞ்சிய கலைஞர் தான் ஜெமினி கணேசன் அவர்கள். அப்படி அவருக்கும் நடிகை புஷ்பவல்லிக்கும் பிறந்த மகளாக சினிமாவில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை ரேகா என்கிற பாணு ரேகா கணேசன். சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பின் 15 வயதில் அஞ்சனா சஃபர் என்ற படத்தில் […]
பெங்களூருவில் ஓட்டுனரின் அஜாக்கிரதையால் பேருந்து சக்கரத்தில் மாணவி சிக்கியதை அடுத்து சக மாணவர்கள் கொதித்தெழுந்து போராட்டம் நடத்தினர். பெங்களூருவில் ஞானபாரதி கல்லூரி அருகே பேருந்து நிறுத்தம் உள்ளது. அந்த வழியாக பேருந்தில் வந்த கல்லூரி மாணவி ஷில்பா(23) கீழே இறங்கியுள்ளார். அப்போது பேருந்து திடீரென இயக்கப்பட்டதால் கீழே விழுந்த அவர் சக்கரத்தில் சிக்கினார். உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு சக மாணவர்கள் மாணவியை ஆட்டோ மூலம் அழைத்துச் சென்றனர். இதனிடையே பேருந்தை […]
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளும் துணை விரிவுரையாளராவதற்குண்டான தேர்வை எழுதி விரிவுரையாளராகலாம் என சத்தீஸ்கர் உயிர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. போஜோகுமாரி படேல் என்ற 26 வயதே நிரம்பிய பார்வையற்ற மாற்றுத்திறனாளி இளம்பெண் துணை விரிவுரையாளருக்கு விண்ணப்பித்திருந்தார். அனைத்து தகுதிகளும் இருந்த நிலையில் பார்வை இல்லாததால் இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் எதிர்த்து மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி நரேந்திகுமார் வியாஸ் என்பவர் விசாரித்தார். பி.எஸ்.சி. எனப்படும் […]
பிக்பாஸில் இந்த சினிமா பிரபலம் இருக்க கூடாது, உடனடியாக அவரை வெளியேற்றுங்கள் என மகளிர் ஆணையத் தலைவி அனுப்பி கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்டிவியில் பிக்பாஸ் சீசன் 6 நேற்று முதல் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது. இதே போல , இந்தியில் சல்மான் கான் பிக்பாஸ் சீசன் 16ஐ தொகுத்து வழங்குகின்றார். இது கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகின்றது. கடந்த வாரம்அக்டோபர் 1ம் தேதி 14 போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டு நிகழ்ச்சி ஆரம்பம் ஆகியுள்ளது. […]