திருமணம் செய்து கொள்ளுமாறு தொல்லை கொடுத்த காதலியை, கொலை செய்து வீட்டிலேயே புதைத்துவிட்டு குடும்பத்துடன் தப்பிச்சென்ற காதலனை காவல்துறையினர் கைது செய்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் கிதாவுத் கிராமத்தைச் சேர்ந்தவர் குஷ்பு. இளம் பெண்ணான இவர் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதியிலிருந்து மாயமாகியுள்ளார். அப்போது, அவரது தந்தை பிக்ராம் சிங் என்பவர் தனது மகளை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்தபோது […]

தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தப்படுமா? என்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் DPI வளாகத்தில் 61 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான பதவி உயர்வு ஆணையை வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “மழைக்காலத்துக்கு முன்னரே இடியும் நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் உள்ள கோப்புகள், வருகைப் பதிவேடு […]

வாடகைத்தாய் மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்ள சில சட்டத்திட்டங்களை கடந்த ஜனவரி 2022ல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அது தொடர்பான தகவல்களை பார்க்கலாம். வாடகைத்தாய் ஒழுங்குமுறை சட்டம் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. வாடகைத் தாய் ஒழுங்குமுறை மசோதா மறுபரிசீலனை செய்த பின்னர் பிப்ரவரி 5, 2020ல் நிலைக்குழு முன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 2021ம் ஆண்டு குளிர்காலக் கூட்டத்தொடரில் இரு அவைகளும் இது குறித்த மசோதாவை நிறைவேற்றியது. […]

சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் ஐடி நிறுவனம் அதிகம் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் நியமனம் குறைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் அனைத்து துறைகளும் பொருளாதாரத்தில் பின் தங்கி இருந்த நிலையில், ஐடி துறை எந்தவித மாற்றமும் இன்றி இயங்கி வந்தது. ஐடி ஊழியர்கள் வீடுகளில் இருந்தே 2 ஆண்டுகளாக வேலை செய்து வந்த நிலையில், இந்தாண்டு […]

மாந்திரீகவாதி என அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர், 25 வயது இளம்பெண்ணை கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது பெண்ணுக்கு திருமணமாகி கணவர் மற்றும் ஒரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இதற்கிடையே, அந்த குடும்பத்திற்கு சஞ்சய் சர்மா என்பவர் மாந்திரீகவாதி எனக்கூறி அறிமுகமாகி உள்ளார். பிறகு அந்த குடும்பத்திற்கு சில மாந்திரீக நடவடிக்கைகளையும் செய்துள்ளார். இந்நிலையில், […]

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும் உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான முலாயம்சிங் யாதவ் காலமானார். 82 வயதான அவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் ஹரியானாவில் உள்ள குருகிராம் மேதாந்தா தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அவர் தீவிர சிகிச்சை கண்காணிப்பில் இருந்து வந்தார். கடந்த 2 நாட்களாகவே அவரது உடல் நிலை மிகவும் மோசமாக இருந்து வந்தது. […]

கொரோனா தொற்று உயர்ந்ததை அடுத்து சீனாவில் மீண்டும் லாக்டவுன் அறிவித்துள்ளது. சீனாவில் பள்ளிகள் தேர்வு முடிந்தவுடன் மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் கொரோனா எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. 12 நாளில் 2000க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அதிகரித்தால் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஃபென்யாங் மாநகரில் கொரோனா அதிகரித்ததை அடுத்து அந்நகரில் பல்வேறு பகுதிகளில் கடைகள் , மால்களை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டது. மங்கோலியா மாகாணத்திலும் புதிய பயணிகள் யாரும் உள்ளே வரக்கூடாது […]

ஜெய்ப்பூரில் 108 வயது மூதாட்டி ஒருவரின் வெள்ளி மோதிரங்களைத் திருட கொள்ளையர்கள் அவரது கால்களை வெட்டிச் சென்ற கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே 108 வயது மூதாட்டி ஒருவர் உடல்நலம் குன்றிய நிலையில், வசித்து வந்தார். இந்நிலையில், அந்த மூதாட்டியின் கால், கொள்ளையர்களால் வெட்டப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மூதாட்டியின் மகள் கூறுகையில், ”மூதாட்டி காலில் அணிந்திருந்த வெள்ளி நகைகளை திருடுவதற்காக, […]

ஈரோடு, சேலம், தென்காசி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும் […]

உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று பெய்த அதிகன மழைக்கு 9 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் பல பகுதிகளில் கனமழைபெய்து வருகின்றது.உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் 9 பேர் வெவ்வேறு சம்பவங்களில் ஒரே நாளில் உயிரிழந்ததாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் பெய்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மூன்றாவது நாளாக […]