கோவையில் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி அன்று இறைச்சி கடைகள் செயல்பட மாநகராட்சி நிர்வாகம் தடைவிதித்துள்ளது. மேலும், கோவை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் இரண்டாம் தேதி எந்த விதமான இறைச்சியையும் விற்பனை செய்ய கூடாது என மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது. காந்தி ஜெயந்தி அன்று ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி போன்ற உயிரினங்களை வதை செய்வது மற்றும் விற்பனை […]

கால்பந்து உலகின் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் 19 கோடி ரூபாய் வசூலிப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகின் முன்னணி மற்றும் அனைத்து தரப்பினரும் உபயோகிக்கும் தளமான இன்ஸ்டாகிராமில், கால்பந்து நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனல்டோவை 484 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். இந்நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரப்படுத்தப்படும் ஒரு பதிவுக்கு, அவர் இந்திய மதிப்பில் ரூ.19 கோடி வசூல் செய்வதாக ஒரு தனியார் நிறுவனத்தின் […]

அதிவேக இணைய வசதியை பெற, 5 ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளது. அதிவேக இணைய வசதியை கொடுக்கும் 5 ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு டெல்லியில் இருக்கும் பிரகதி மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி அலைவரிசையை, தொடங்கி வைக்கிறார். இந்திய மொபைல் காங்கிரசின் (ஐ.எம்.சி.) […]

வகுப்பறையில் மாணவிகளுக்கு ஆபாச வீடியோ காட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியரை, கிராம மக்கள் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். ஜார்கண்ட் மாநிலம் மேற்கு சிங்புமை அடுத்த பதஜம்டாவில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றுபவர் துகாராம். இவர், வகுப்பறையில் உள்ள மாணவிகளிடம் ஆபாச படங்கள், வீடியோக்களை காண்பித்து பாலியல் ரீதியாக அவர்களிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இது குறித்து 6 மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனால், […]

11-ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்ற சம்பவத்தில், அதற்கு காரணமான திண்டுக்கல்லை சேர்ந்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்1 படித்து வருகிறார். கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகளை கவனிப்பதற்காக அவரது பெற்றோர் மாணவிக்கு செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர். ஆனால், சிறுமி இன்ஸ்டாகிராம் மற்றும் ஆன்லைனில் கேம் விளையாடுவதற்கும் செல்போனை […]

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர், போன் செய்து பல இடங்களில் வெடிகுண்டு வெடிக்க இருப்பதாக மிரட்டல் விடுத்தார். அந்த மர்மநபர் பேசிய செல்போன் எண்ணை வைத்து, காவல்துறையினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மீஞ்சூர் அருகே மிரட்டல் விடுத்தவரின் செல்போன் சிக்னல் காட்டியது. இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், ரயில் நிலையத்தில் இருந்த மிரட்டல் விடுத்த நபரை கைது செய்தனர். இதுகுறித்து அந்த […]

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள மேற்கு சிங்புமை அடுத்த பதஜம்டாவில் இருக்கும் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் வேலை செய்து வருகிறார் துகாராம். இவர் பள்ளி வகுப்பறையில் மாணவிகளிடம் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை காண்பித்து பாலியல் ரீதியாக அவர்களிடம் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆறு மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். உடனே அவர்களது பெற்றோர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் காவல்துறையினர் இதுகுறித்து எந்தவித […]

பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஹெலிகாப்டர் பயண சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களூருவில் முன்னணி ஐடி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அதன் காரணமாக உள்ளூர் மற்றும் வெளியூர் என பலரும் அங்கு வேலை நிமித்தமாக வசித்து வருகின்றனர். அதனால், அங்கு வாகன நெரிசல் கடுமையாக இருக்கும். இத்தகைய சூழலில் பெங்களூரு நகருக்குள் மட்டுமே சேவை வழங்கும் வகையில், ஹெலிகாப்டர் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக […]

புதுச்சேரி, ஏனாம் அருகே கடந்த 24-ஆம் தேதி காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மேட்டகருவில் இருக்கும் தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்த அந்த பகுதியை சேர்ந்த பெட்டிரெட்டி கோவிந்து மற்றும் சல்லாடி சதிஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து காவல்துறையினர் 1 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இவர்கள் ஆந்திராவைச் சேர்ந்த ரீத்து பிரகாஷ், சிந்தாலா யாமினி பிரசாத் […]

புதையல் எடுக்க குழி தோண்டியவர், அதே குழிக்குள் பூஜை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்ததால் நரபலி கொடுக்கப்பட்டாரா? என பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். விவசாயியான இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். விவசாயம் செய்து வரும் லட்சுமணன், அவ்வப்போது புதையல் எடுப்பதாக கூறி புதையல் வேட்டையில் ஈடுபடுவது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில், புதையல் எடுக்க போவதாக […]