fbpx

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். கேரளாவில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கான தீர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், போதைப் பொருட்கள் அல்லது மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுபவர்களின் உரிமைகளை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் […]

உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்தான இன்கோவாக் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் தடுக்க பல்வேறு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு உள்ளிட்ட தடுப்பூசிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் 2 தவணைகளாகவும் பூஸ்டர் டோசாகவும் போடப்படுகிறது. உலக அளவில் பைசர் உள்ளிட்ட ஏராளமான தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்தாலும் இந்தியாவில் கோவேக்‌ஷின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளே […]

கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவனை 4 பேருடன் சேர்ந்து கொடூரமாக கொன்ற மனைவி போலீசில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் கோண்டலே பந்தன் பாடா என்ற கிராமத்தில் கடந்த 20ஆம் தேதி அன்று ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை முடிவில் அந்த […]

கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 13 வயது சிறுமி அருகில் இருக்கும் பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். ஆறு வருடங்களுக்கு முன்பு இந்த சிறுமியின் தந்தை உயிரிழந்து விட்டார். எனவே சிறுமியின் தாய் இரண்டாவதாக 35 வயதான விமல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தகைய நிலையில், அச்சிறுமியின் தாய் வேலைக்கு செல்லும் போதெல்லாம் வளர்ப்பு தந்தையாக இருக்கும் விமல் சிறுமியை அடிக்கடி மிரட்டி பாலியல் […]

ஆந்திர மாநிலத்தில் இருக்கும் அம்பாவரம் எனும் கிராமத்தில் கடந்த 2021 இல் சாக்கடை கால்வாயில் ஒரு சிறுமியின் பிணம் பிளாஸ்டிக் பையில் கட்டப்பட்ட நிலையில் கிடந்து போலீசாரால் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து, அந்த சிறுமியின் உடலானது மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உடற்கூறு ஆய்வில் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இத்தகைய நிலையில், சிறுமியின் பெற்றோர் இந்த சம்பவம் குறித்து அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை […]

திருமணமான பெண்ணுடன் தவறான உறவு வைத்திருந்த வாலிபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே குறிச்சிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையப்பன் (வயது 27). இவர் நேற்று குறிச்சிகுளம் பகுதியில் நெல்லையில் இருந்து மதுரை செல்லும் புறவழிச்சாலையில் உள்ள பாலத்தின் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெள்ளையப்பனை சரமாரியாக வெட்டி சாய்த்தனர். […]

இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் விவரங்கள்… பதவியின் பெயர் மற்றும் காலியிடங்கள்:செயற்பொறியாளர் (2), உதவி செயற்பொறியாளர் (4), உதவிப் பொறியாளர் (4) சம்பள விவரம்: செயற்பொறியாளர் (கட்டுமானம்) – ரூ.35,000 உதவிச் செயற்பொறியாளர் – ரூ.30,000உதவிப் பொறியாளர் (கட்டுமானம்) – ரூ.25,000 யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? பிற அரசுத்துறை/ அரசு சார்ந்த துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள 65 வயதிற்கும் குறைவான பொறியாளர்கள் விண்ணப்பிக்கலாம் […]

ஜெர்மனை சேர்ந்த பிரபல ஐடி நிறுவனமான எஸ்ஏபி (சேப்) நிறுவனம் 3,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். இதனால், உலகளவில் முன்னணி நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அமேசான், ட்விட்டர், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் பணிநீக்க அறிவிப்புகளை சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில், சர்வதேச […]

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, திமுக கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் மற்றும் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு போட்டியிட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகின. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி […]

தேசிய தேர்வு முகமை (NTA) அடுத்த வாரம் NEET UG 2023 தேர்வுக்கான விண்ணப்பப் பதிவைத் தொடங்க வாய்ப்புள்ளது. தேசிய தேர்வு முகமை அறிவிப்பின்படி, NEET UG நுழைவுத் தேர்வு மே 7, 2023 அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் பதிவு செயல்முறை தொடங்கிய பிறகு, NEET UG 2023 ஆர்வலர்கள் தங்கள் விண்ணப்பங்களை neet.nta.nic.in இல் சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள். NEET UG 2023 தேர்வு எழுத விரும்புவோர், […]