திருப்பூரில் 12ஆம் வகுப்பு மாணவியை மருமகளாக கூறி, தனது மகனிடம் பேச சொல்லி தொல்லை கொடுத்த ஆசிரியையை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த காரத்தொழுவு பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கணிதப்பாட முதுநிலை ஆசிரியையாக சாந்தி பிரியா பணியாற்றி வருகிறார். இவர் மீது மாணவிகள் தொடர்ச்சியாக பல்வேறு அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 12ஆம் வகுப்பு மாணவி ஒருவரை மருமகளே என அழைக்கும் […]
பெண்கள் நகரப் பேருந்துகளில் கட்டணமின்றி இலவசமாக பயணிப்பதை, ஓசி பயணம் என்று கூறியது குறித்து அமைச்சர் பொன்முடி விளக்கமளித்துள்ளார். திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த படி, நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் பயணம் என்று திட்டத்தை முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. இந்த திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.. ஆனால் சில அரசு பேருந்து நடத்துநர்கள், பெண்களை தரக்குறைவாக நடத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து […]
பிஎஃப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி, கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) தலைவர் ஓஎம்ஏ சலாம் வீடு உட்பட பிஎஃப்ஐ அமைப்பின் மாநில, மாவட்ட அளவிலான தலைவர்களின் வீடுகளில் என்ஐஏ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். […]
6ஆம் வகுப்பு மாணவர்கள் 13 பேரை ஆசிரியர் கரும்புகளால் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் கும்லாவில் பள்ளி ஆசிரியர் ஒருவர், 6ஆம் வகுப்பு மாணவர்கள் 13 பேரை கரும்புகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, மாணவர்கள் தனது உத்தரவின் படி நடனமாட மறுத்ததால் கோபமடைந்த ஆசிரியர், மாணவர்களை […]
ரஷ்யாவிலிருந்து ஐரோப்பாவுக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை இணைக்கும் ‘நார்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் 2’ எரிவாயு குழாய்களில் திடீர் கசிவு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை தொடர்ந்து, புடினின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பல்வேறு பொருளாதார தடைகளை ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் விதித்துள்ளன.. எனினும் எதையும் பொருட்படுத்தாத ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.. இதனிடையே பொருளாதார தடை நடவடிக்கைகளை தொடர்ந்து […]
2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழக சட்டசபைக்கான தேர்தலும் வரும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “2024இல் நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் வர உள்ளது. அப்போது அதிமுக வெல்லும். ஆட்சி பொறுப்பேற்று 16 மாத காலமாக எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. கலைஞருக்கு […]
முதல் மனைவி வீட்டிற்கு சென்று வருவதைக் கேட்டு சண்டையிட்ட 2-வது மனைவியை தலையனை வைத்து அழுத்தியும் கரண்ட்ஷாக் கொடுத்தும் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். வடசென்னை பழையவண்ணாரப்பேட்டையில் வசித்து வருபவர் ஷாஜகான் (47). இவர் தோல் ஆடைகளைக் கொண்டு டெய்லர் வேலை செய்து வருகிறார். இவருக்கும் ஜெபினா என்ற பெண்ணிற்கும் திருமணமாகி இரண்டு பெண், ஒரு ஆண் என மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வேலை பார்க்கும் இடத்தில் […]
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து, ரூ.37,576-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]
ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி மீதும், அவரின் மகன் மீதும், மருமகள் காவல்துறையில் புகாரளித்துள்ளார்.. தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான திலகவதியின் மகன் பிரபு திலக்… மருத்துவரான இவர் சில படங்களையும் தயாரித்துள்ளார்.. கடந்த 2007-ம் ஆண்டு ஸ்ருதி என்ற பெண்ணை பிரபு திருமணம் செய்து கொண்டார்.. இந்த தம்பதிக்கு தற்போது 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஸ்ருதி மீது திலகவதி குடும்பத்தினரும், கணவர் மாமியார் மீது ஸ்ருதியும் […]
நடிகர் கார்த்தியின் ‘சர்தார்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இரும்புத் திரை, ஹீரோ படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக பி.எஸ். மித்ரன் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘சர்தார்’. இந்தத் திரைப்படத்தில் கார்த்தி, சங்கி பாண்டே, ராஷி கண்ணா, ரஜிதா விஜயன், முரளி சர்மா, முனீஸ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தில் நடிகை லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் […]