ஆவின் பால் பதப்படுத்தும் நிலையத்தில் பால் பாக்கெட்டுகளை ஊழியர்கள் திருடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் தொழிற்பேட்டையில் ஆவின் பால் பதப்படுத்தும் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் சேகரிக்கப்படும் பால், பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தினமும் சுமார் 30 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் பேக்கிங் செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும் நிலையில், […]
நித்தியானந்தா ’கைலாசா’ என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதாக கூறிவரும் நிலையில், அந்நாட்டிற்கான ஐ.நா. தூதராக விஜயபிரியா நித்தியானந்தா என்பவரையும் நியமித்துள்ளார். பாலியல் வன்கொடுமை, ஆட்கடத்தல், மோசடி என்று பல வழக்குகளில் சிக்கி கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தனது சில சீடர்களுடன் தலைமறைவானவர் நித்தியானந்தா. தொடர்ந்து, தனித் தீவு ஒன்றை குத்தகைக்கு எடுத்து, அதனை கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி இருப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். கைலாசா என்ற […]
இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (LIC) தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறந்த திட்டங்களை வழங்கி வருகிறது. இப்போது எல்ஐசி குறிப்பாக பெண்களுக்கு ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டம் எல்ஐசி ஆதார் ஷீலா திட்டம் என்று அழைக்கப்படுகிறது. 8 முதல் 55 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த திட்டம் அதன் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் சேமிப்பு இரண்டையும் வழங்குகிறது. ஆனால் செல்லுபடியாகும் ஆதார் அட்டை […]
தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின், திடீரென முன்னணி இயக்குநர் செல்வராகவன் வீட்டிற்குச் சென்று சந்தித்துப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருக்கும் செல்வராகவனின் வீட்டிற்கு நேற்றிரவு திடீரென சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செல்வராகவன் மற்றும் அவரது குடும்பத்தினரோடு பேசிவிட்டு, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்தப் புகைப்படத்தை இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், செல்வராகவன், அவரது குடும்பத்தினர் மற்றும் தனுஷ் ஆகியோரின் தந்தை […]
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.. குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர்.. இதனால் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்குமாரு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.. இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காய்ச்சல் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. நேற்று முதல் கடுமையான […]
“இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்ளுங்கள்… 2024 பாராளுமன்ற தேர்தலோடு தமிழக சட்ட சபை தேர்தல் நடந்தால் நாங்கள் பொறுப்பல்ல” என்று அண்ணாமலை பேசியுள்ளார். ஆ.ராசாவுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து, சிவானந்தா காலணி பகுதியில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் […]
எட்டயபுரத்தில் திருமணமான சில நாட்களிலேயே புது மாப்பிள்ளை தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் டிவி பழுது பார்க்கும் கடையில் வேலைபார்த்து வந்த ராகவன் என்பவருக்கும், அந்த கடைக்குப் பக்கத்தில் உள்ள தட்டச்சுப் பயிற்சி பள்ளியில் படித்து வந்த மகாலட்சுமி என்பவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக காதல் இருந்து வந்தது. இந்த காதல் உறவை நிரந்தர வாழ்க்கையாக வடிவமைக்க இருவரும் ஆசைப்பட்டுள்ளனர். வெவ்வேறு […]
அதிமுக அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ் நியமித்துள்ளார். இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் கழக அமைப்புச் செயலாளராக இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் அனைவரும் அரசியல் ஆலோசகருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை […]
1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பாடம்நடத்தும் ஆசிரியர்களுக்கு, எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் அக்டோபர் 12ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. ஆசிரியர்களுக்கான பயிற்சி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு விடுமுறையும் நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் […]
தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் அதன் சார்பு அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் 6 இடங்களிலும், பொள்ளாச்சியில் 4 இடங்களிலும், ஈரோட்டில் 2 இடங்களிலும், இராமநாதபுரம், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டம், தாம்பரம், கடலூர், மேட்டுப்பாளையம், மதுரை உள்ளிட்ட இடங்களில் மர்ம நபர்கள் பாஜக மற்றும் இந்து முன்ணணி ஆகியோர் வீடுகள் […]