வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் வகையில் நிதிஷ்குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவவர் சோனியா காந்தியுடன் டெல்லியில் சந்தித்தனர். வருகின்ற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அல்லாத எதிர்கட்சிக்கான கூட்டணியை ஒன்றிணைக்கும் தீவிர பணியில் பீகார் முதலமைச்சர் ஈடுபட்டுள்ளார். பீகாரில், பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்து கொண்ட பின்னர், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் நிதிஷ் […]
காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு வேட்புமனுவை மூத்த தலைவர்களுள் ஒருவரான சசி தரூர் சார்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அடுத்த மாதம் 17ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இதில் போட்டியிடுபவர்களுக்கு வேட்புமனுக்களை விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வரும் 30-ம் தேதி வேட்புமனுக்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் […]
திருப்பதி அருகே புதிதாக கட்டப்பட்ட மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் மருத்துவரும் அவரது 2 குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ரேணிகுண்டாவில் கார்த்திகேயா மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனை புதிதாக கட்டப்பட்டது. மருத்துவர் ரவிசங்கர் ரெட்டி என்பவர் இந்த மருத்துவமனையை கட்டியுள்ளார். மூன்று மாடி கட்டடத்தில் மூன்றாவது தளத்தில் மருத்துவர் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த மருத்துமனையில் இன்று எதிர்பாராத விதமாக திடீர் தீ விபத்து […]
புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 1ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அல்லு அர்ஜுன் நடித்து வெளியான திரைப்படம் புஷ்பா . உலகம் முழுவதும் வெற்றியைக் கொடுத்தது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இந்தியில் வெளியான திரைப்படத்தின் வசூல் ரூ.100 கோடிக்கு மேல் சாதனை செய்துள்ளது. இதனிடையே இரண்டாம் பாகம் வெளியாவது பற்றிய எதிர்பார்பபில் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். இந்நிலையில் புஷ்பா இரண்டாம் […]
நடிகை ஐஸ்வர்யா ராய் இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்துள்ளதாக சமுக வலைத்தலங்களில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தலங்களில் பரவி வருகின்றன. பொன்னியின் செல்வன் திரைப்படம் அடுத்தவாரம் திரைக்கு வர உள்ளது. இதனால் திரைப்படத்தை ப்ரொமோட் செய்யும் பணியில் படக்குழுவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். முன்னதாக சென்னையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா மற்றும் டீசர் வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டார். ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் ஐஸ்வர்யா […]
சிம்புவுக்கு விலை உயர்ந்த காரை பரிசாக அளித்துள்ள தயாரிப்பாளர் ஐசரிகணேஷ் கௌதம் வாசுதேவவ் மேனனுக்கு பைக்கை பரிசாக அளித்துள்ளார். வெந்துதணிந்தது காடு திரைப்படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து விக்ரம் திரைப்பட கமலஹாசன் பாணியில் ஐசரிகணேசும் பரிசுகளை அள்ளிக் கொடுத்துள்ளார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அன்மையில் வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு ஜெயமோகன் எழுத்தின் அடிப்படையாகக் கொண்டு இப்படம் வெளியாகி உள்ளது. சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். […]
சென்னை மாதவரம் அருகே நடித்துக்காட்டுவதற்காக தூக்கிட்டுக் கொண்ட 11 வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாதவரம் அருகே புழல் புத்தகரம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் . இவருடைய இளைய மகன் கார்த்திக் . 11 வயதாகும் கார்த்திக் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். கார்த்திக்கும் இவரது அண்ணனும் தூக்குபோட்டு விளையாடியுள்ளனர். விளையாட்டாக எப்படி தூக்கிட்டுக் கொள்வது என்பது போல நடித்துக் காண்பித்துக்கொண்டிருந்தான். அப்போது […]
ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றும் ஊழியர்களை மாற்ற பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. திமுக அமைச்சரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொறுப்பேற்ற நாள் முதல் அந்த துறையில் புது புது மாற்றங்களும், அதிரடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆசிரியர்கள் இடம் மாறுதல்கள் அனைத்தும் கவுன்சிலிங் மூலம் மட்டுமே நடத்தப்படுகிறது. இந்நிலையில், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஊழியர்களை மாற்ற பள்ளிக்கல்வித்துறை இணை […]
சிஎஸ்கே கேப்டன் தோனி, இன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, திடீரென தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், இன்று மதியம் 2 மணிக்கு உங்கள் அனைவருடனும் சில உற்சாகமான தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறியிருந்தார். பேஸ்புக்கில் நேரலையில் ரசிகர்களை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இதனால், ஏதோ புதிய அறிவிப்பை வெளியிடப்போகிறார் […]
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு நேற்று திடீரென சுவாசப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் பெங்களூருவில் உள்ள மணிபால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு குறைந்தபட்ச செயற்கை சுவாசம் மூலம் மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், சிறப்பு மருத்துவக் குழுவினர் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் […]