குழந்தை தந்தையிடம் வளர்வது சட்டவிரோதம் இல்லை என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஜெயசித்ரா அமிர்தநாயகம் என்பவர், தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு ஒரு 10 வயது மகன் இருக்கிறான். தம்பதிகள் பிரிந்ததால் மகன், தந்தையோடு வசித்து வருகிறான். இந்நிலையில் ஜெயசித்ரா, சமீபத்தில் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘எனது 10 வயது மகனைக் கண்டுபிடித்து ஆஜர்படுத்த பாளையங்கோட்டை அனைத்து மகளிர் […]
திருமலை – திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான சொத்தின் மதிப்பை தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி வெளியிட்டுள்ளார். திருமலை – திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டமானது, தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”திருமலை – திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான சொத்துகள் குறித்து இன்று வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திருமலை – திருப்பதி தேவஸ்தானத்துக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 960 […]
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டா மணிக்கு நடிகர் தனுஷ் ரூ.1 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார். நகைச்சுவை நடிகர் போண்டா மணி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவரின் இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதால் அவருக்கு உதவித் தேவைப்படுவதாக நடிகரும் போண்டா மணியின் நண்பருமான பெஞ்சமின், […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 4,777 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 23 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5,196 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]
நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும், விஜய்யின் வாரிசு திரைப்படமும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களுக்குப் பிறகு ஹெச்.வினோத் மற்றும் அஜித் மூன்றாவது முறையாக இணையும் இந்த படத்திற்கு ’துணிவு’ என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கூட்டியது. இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித் இப்படத்தின் படப்பிடிப்புக்காக பாங்காக் சென்ற […]
ரவீந்திர ஜடேஜா முன்பு குத்தாட்டம் போட்டு ஆடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் ஷிகர் தவான் பகிர்ந்துள்ளார். டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் 16ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில், காயம் காரணமாக சிகிச்சை பெற்று வரும் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா இடம்பெறவில்லை. அதேபோல், ஷிகர் தவானும் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இல்லை. தற்போது, ரவீந்திர […]
இந்தியா – ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெற இருக்கிறது. 1-1 என்று இரு அணிகளும் சமநிலையில் உள்ளதால், தொடரின் டிசைடரான இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்று தொடரின் முன்னிலையில் இருந்த ஆஸ்திரேலிய அணியை, 2-வது போட்டியில் பதிலடி […]
பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Relationship Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு Computer Science, IT பாடப்பிரிவில் Graduate, M.Sc, BE, MCA, MBA ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவமாக […]
அதிக திறன் வாய்ந்த சூரிய மின் தகடுகளின் ஜிகா வாட் அளவிலான உற்பத்தி திறனை அடைவதற்கான தேசிய அதிக திறன் கொண்ட சூரிய மின்தகடுகள் திட்டத்தில் ரூ 19,500 கோடி செலவிலான உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் பரிந்துரைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இறக்குமதியை சார்ந்து […]
வியாழன் கோள் சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கோள் ஆகும். 60 ஆண்டுகளுக்கு பின் இந்த அரிய நிகழ்வானது நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மேற்கில் சூரியன் அஸ்தமிக்கும் போது கீழ் திசையில் வியாழன் எழுகிறது. அவ்வாறு எதிர் எதிர் திசையில் இது நிகழும் போது பூமிக்கு நெருக்கமாக வரும் வியாழன் கோள் வானில் தோன்றும். நாசா விஞ்ஞானி கூற்று படி, வியாழன் கோள் பூமியில் இருந்து 367 மில்லியன் […]