விஜய் பரப்புரை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் கருதி இன்று தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய், கரூர் சம்பவத்திற்கு பிறகு மீண்டும் மக்களை சந்திக்க திட்டமிட்டார். ஆனால் போலீசார் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டனர். இதனையடுத்து தவெகவில் புதிதாக இணைந்த அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் ஏற்பாட்டில் ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை […]
மத்திய அரசு 100 நாள் வேலை உறுதி திட்டத்தை 125 நாட்களாக அதிகரிக்க எடுக்கும் முயற்சியை வரவேற்பதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடந்த 2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தலின்போது, திமுகவின் தேர்தல் அறிக்கையில் இன்றைய முதல்வர், அன்றைய எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 100 நாட்களிலிருந்து 150 நாட்களாக உயர்த்தப்படும். […]
ஈரோட்டில் இன்று நடக்கவிருக்கும் ‘விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி’ தொடர்பாக 11 வழிகாட்டு நெறிமுறைகளை தவெக சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று ஈரோடு மாவட்டம், மூங்கில்பாளையத்தில் காலை 11.00 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் ஈரோடு மாவட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காவல் துறையின் முழுமையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடைபெற உள்ள இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு கட்சியினரும், பொதுமக்களும் […]
மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கிய விவரத்தை சமர்ப்பிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பொருளாதார தடை இன்றி மாணவர்கள் கல்வியை தொடர்வதற்கு மாதந்தோறும் உதவி தொகைகளையும் தமிழரசு வழங்கி வருகிறது. புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவற்றின் மூலம் மாதந்தோறும் தகுதி உள்ள மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்கள் பொருளாதார தடை இன்றி கல்வியை தொடர் முடிகிறது. அந்த நிலையில் மற்றொரு திட்டத்தை […]
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். […]
சென்னையில் செயல்படும் அரசு போட்டித் தேர்வு பயிற்சி மையங்களில் சேர மாணவர்கள் டிசம்பர் 22 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்; தமிழக மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாகப் பயிற்சி அளிக்கும் வகையில் தமிழக அரசின் பயிற்சி மையங்கள் சென்னையில் பழைய வண்ணாரப்பேட்டை சர் தியாகராயா கல்லூரியிலும், சேப்பாக்கம் மாநிலக் கல்லூரியிலும் […]
Varasidhi Vinayakar, the one who removes the sorrows of life.. a famous shrine that attracts devotees..!
Annamalai has urged the DMK government to ensure that all basic facilities are available in government hospitals.
According to Vastu Shastra, some types of plants, although beautiful to look at, should not be grown in front of the main entrance of the house.
கேரளாவையே உலுக்கிய ‘ஜாலி ஜோசப்’ சயனைடு கொலை வழக்கு பாணியில், கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் தனது கணவர் மற்றும் குழந்தைகளை கொல்ல முயன்ற 33 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்காதல் விவகாரத்தை மறைக்கவும், தனது எல்லை மீறிய ஆசைகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்த குடும்பத்தினரை ஒழிக்கவும் சைத்ரா என்ற அந்தப் பெண் மேற்கொண்ட விபரீத முயற்சி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெலூர் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரா என்பவரின் மனைவியான சைத்ராவுக்கு, […]

