fbpx

அதிபர் பதவியில் இருந்து கோட்டபய ராஜபக்ச ராஜினாமா செய்ததாக இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தி அந்நாட்டு கடந்த சில மாதங்களாகவே தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதையடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார்.. எனினும் அதிபர் கோட்டபய ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் என்று போராடங்கள் மீண்டும் வலுப்பெற்றன.. இதையடுத்து தனது அதிகாரப்பூர்வ அதிபர் […]

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2,283 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,10,809ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 682 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் 17,858 பேர் கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கொரோனா மீண்டும் தீவிரமாகியுள்ள நிலையில், பொதுமக்கள் மட்டுமின்றி பொதுவாழ்க்கையில் […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 20,038 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 47 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 16,994 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு பாகிஸ்தான் கேப்டன் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த சில ஆண்டுகளாக தவிர்க்க முடியாத பெயர் விராட் கோலி. அந்தளவுக்கு தனது அபார பேட்டிங்கால் இந்திய அணிக்கு வெற்றிகளை குவித்து தந்துள்ளார். எதிரணி எவ்வளவு ரன்கள் அடித்தாலும் பரவாயில்லை, கோலி நிலைத்து நின்றால் வெற்றி இந்திய அணிக்கு என்பது எழுதப்படாத விதியாகவே இருந்தது. டெஸ்ட், ஒருநாள், டி20 என்று அனைத்து […]

தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக தனி ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடலூரை சேர்ந்த ஸ்ரீமதி என்ற 12ஆம் வகுப்பு மாணவி அவரது விடுதி அறையில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக வெளியான செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. கனியாமூர் தனியார் பள்ளியில் […]

ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 72,646 கனஅடியாக இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 81,930 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல் கபினி அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 34 ஆயிரம் கனஅடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து […]

பஞ்சாப் & சிந்து வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Clerk பணிகளுக்கு என 463 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 20 முதல் 28 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து ஏதேனும் ஒன்றில் பட்ட படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு […]

நாடு முழுவதும் இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட உள்ளது.. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.. கொரோனா நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.. இந்த நிலையில் இந்தியாவில் 18 வயதுகு மேற்பட்ட அனைவருக்கும் இலவச பூஸ்டர் டோஸ்களை […]

நீடித்த நுகர்வு வாயிலாக சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறை இயக்கத்தை வலியுறுத்தும் விதமாக, பழுதுபார்க்கும் உரிமைக்கான ஒட்டுமொத்த நடைமுறையை  உருவாக்குவதற்கான முக்கியமான நடவடிக்கையை மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை மேற்கொண்டுள்ளது. உள்ளூர் சந்தையில் நுகர்வோர் மற்றும் பொருட்கள் வாங்குவோருக்கு அதிகாரமளித்து, அசல் சாதன உற்பத்தியாளர்கள், மூன்றாம் நபர் வாங்குவோர் மற்றும் வியாபாரிகள் இடையே, இணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே பழுதுபார்க்கும் உரிமைக்கான நடைமுறை உருவாக்கப்படுகிறது. மேலும் பொருட்களின் நீடித்த நுகர்வோர் மற்றும் மின்னணு கழிவுகளை […]

பல சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் இடையே சென்னை வானகரத்தில் கடந்த 11-ம் தேதி, அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயாளராக தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.. இதை தொடர்ந்து அதிமுக கட்சி விதிகள், கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்-ஐ நீக்குவதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட […]