fbpx

அதிமுகவில் தனது ஒப்புதல் இல்லாமல் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் புகார் கடிதம் எழுதியுள்ளார். அதிமுகவில் இரு அணியினரும் சட்டரீதியான போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அதிமுகவில் புதிய நிர்வாகிகளை நியமித்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். குறிப்பாக துணை பொதுச்செயலாளர்கள், தலைமை நிலையச் செயலாளர்கள், 11 அமைப்புச் செயலாளர்கள், எம்.ஜி.ஆர். மன்ற மாநிலத் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை அறிவித்தார். இந்நிலையில், இந்த அறிவிப்புக்குப் […]

பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்த வாரம் டெல்லி செல்கிறார்.. சர்வதேச செஸ் போட்டியான, செஸ் ஒலிம்பியாட் முதன்முறையாக இந்த ஆண்டு சென்னையில் நடைபெற உள்ளது.. கொரோனா காரணமாக 2021-ம் ஆண்டு ஆன்லைனில் நடந்த இந்த போட்டியில் ரஷ்யாவும் இந்தியாவும் கோப்பையை பகிர்ந்து கொண்டன.. இந்த சூழலில் 2022-ம் ஆண்டுக்கான செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ரஷ்யாவில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.. ஆனால் உக்ரைன் மீதான போர் காரணமாக, இந்த […]

அண்ணாநகரில் வரி பாக்கி வைத்திருந்த மருத்துவமனைக்கு மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை பேனர் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சி அண்ணா நகர் மண்டலத்துக்கு உட்பட்ட அண்ணா நகர், அரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் பிரபல நட்சத்திர ஓட்டல்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள் முறையாக சொத்து வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளது. இதுதொடர்பாக பொதுமக்கள் தெரிந்து கொள்ளும்படி அந்த கட்டிடங்களில் சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் அறிவிப்பு பேனர் வைத்து எச்சரிக்கை […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 20,139 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 38 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 16,482 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

’நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வேன்’ என யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். இதையடுத்து, நாடு முழுவதும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசியல் கட்சி தலைவர்களிடம் ஆதரவு அளிக்கும்படி பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில், அசாம் மாநிலத்திற்கு சென்று எதிர்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது அவர் பேசுகையில், ”நான் […]

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருவதால், முழு கொள்ளளவான 120 அடியை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழையால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் 1.10 லட்சம் கன அடிக்கும் அதிகமான நீர் திறந்து விடப்பட்டது. இதற்கிடையே, கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு […]

பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் ஊரன் அடிகளார் இன்று காலமானார். அவருக்கு வயது 89. சிறந்த சொற்பொழிவாளர், நூலாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர், பத்திரிகையாசிரியர், அற நிறுவனக் காவலர் முதலிய பன்முகங்களை கொண்டவர் ஊரன் அடிகள்… 1933-ம் ஆண்டு திருச்சி மாவட்டம் சமயபுரம் அர்ய்ஜே நரசிங்க மங்கலத்தில் ஊரன் அடிகள் பிறந்தார். 1955 முதல் ஸ்ரீரங்கம், வேலூர், திருச்சிராப்பள்ளி நகராட்சிகளில் நகர் அமைப்பு ஆய்வாளராகப் பணியற்றினார். தனது 22-ம் வயதில் “சமரச சன்மார்க்க […]

ICICI வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Data Entry Operator பணிகளுக்கு என 55 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 12-ம் வகுப்பிவில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இந்த Data Entry Operator பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் […]

மைக்ரோசாப்ட் நிறுவனம் பல்வேறு பிராந்தியங்களில் 1800 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. ஜூன் 30 -ம் தேதியுடன் அந்நிறுவனத்தின் நிதியாண்டு முடிவடைந்த நிலையில், நிறுவனத்தின் கட்டமைப்பு மாற்றங்களின் ஒரு பகுதியாக பணி நீக்க நடவடிக்கை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.. எனினும் நடப்பு நிதியாண்டில், அதிக எண்ணிக்கையில் புதிய ஊழியர்களை பணியமர்த்த உள்ளதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.. எல்லா நிறுவனங்களையும் போலவே, நாங்கள் எங்கள் வணிக முன்னுரிமைகளை ஒரு வழக்கமான அடிப்படையில் மதிப்பீடு செய்து, […]

சீனாவின் “குவாங்க்டங்க் ஓப்போ கைப்பேசி தொலைத்தொடர்பு கழக நிறுவன”த்தின் துணை நிறுவனமான OPPO இந்தியா, ரூ.4,389 கோடி சுங்க வரி ஏய்ப்பு செய்துள்ளதை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கண்டுபிடித்துள்ளது. இந்தியா முழுவதும் உற்பத்தி, வடிவமைத்தல், மொத்த வியாபாரம், கைப்பேசி மற்றும் உதிரிபாகங்கள் விநியோகம் உள்ளிட்டவற்றில் ஓப்போ இந்தியா ஈடுபட்டுள்ளது. ஒன்பிளஸ் மற்றும் ரியல்மீ உள்ளிட்ட பல்வேறு கைப்பேசி நிறுவனங்களுடன் ஓப்போ இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. OPPO இந்தியா அலுவலக வளாகம் […]