fbpx

மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-இன் கீழ் வர்த்தக சான்றிதழ் முறையில் விரிவான சீர்திருத்தங்களை செப்டம்பர் 14, 2022 தேதியிட்ட அறிவிக்கையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நிலுவையில் உள்ள விதிகளில் காணப்படும் சில முரண்பாடுகள் காரணமாக வர்த்தக சான்றிதழ் குறித்து பல்வேறு விதமான விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன், ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் இன்னல்களையும் சந்திக்க நேர்ந்தது. மேலும், வர்த்தக சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களை சாலை போக்குவரத்து […]

மாணவர் சேர்க்கையின்றி காலியாகவுள்ள வேளாண்மை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில்‌ வேளாண்மை பாடத்தை கூடுதலாக மேல்நிலை பள்ளிகளில்‌ தொழிற்பாடப்‌ பிரிவாக அறிமுகப்படுத்தி 300 வேளாண்மை பட்டதாரி தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள்‌ தோற்றுவிக்கப்பட்டது. இவற்றில்‌ மாணவர்‌ சேர்க்கையின்றி காலியாகவுள்ள வேளாண்மை பட்டதாரி தொழிற்கல்வி ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌(TRB) மூலம்‌ தெரிவு செய்து நியமனம்‌ செய்யப்பட்டவர்கள்‌, ஆசிரியர்களின்‌ காலிப்பணியிடங்களை இணைப்பில்‌ கண்டுள்ள படிவத்தில்‌ […]

ஓய்வூதியர்‌ குறை தீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ அடுத்த மாதம் 28-ம் தேதி நடைபெறும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் ‌. தருமபுரி மாவட்டத்தில்‌ ஓய்வூதியர்‌ குறை தீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌, தருமபுரி மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அவர்களின்‌ தலைமையில்‌ சென்னை ஓய்வூதிய இயக்குநர்‌ அவர்களால்‌ 28.10.2022 அன்று(வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில்‌ தருமபுரி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ நடைபெற உள்ளது. எனவே ஓய்வூதியம்‌ மற்றும்‌ குடும்ப ஓய்வூதியம்‌ பெற்று […]

பழம்பெரும் நடிகை சிறுநீரை கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது சிறந்த நடிப்பால் 80-களின் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஜெயக்குமாரி, பெரும்பாலும் வில்லி மற்றும் கவர்ச்சியான வேடங்களில் நடித்துள்ளார். பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரிக்கு வயது 70. இவர் தனது மகனுடன் சென்னை வேளச்சேரியில் வசித்து வருகிறார். அவர் வசிக்கும் வீடு கூட வாடகை வீடு என்று கூறப்படுகிறது. ஆறு வயது சிறுமியாக இருந்த போது கண்டனா படத்தின் மூலம் திரைக்கு […]

தமிழகத்தில் வரும் 21-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது […]

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர்கள் நிலம் வாங்க மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் 2022-2023-ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50% அல்லது அதிகபட்சமாக […]

தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான பள்ளி வேலை நாட்கள், விடுமுறை அடங்கிய அட்டவணையில், 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை மாவட்ட அளவில் நடத்தப்படும் என்றும், காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை விடுமுறை அக்டோபர் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை […]

.சென்னையில் கஞ்சா கேக் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வரும் போதைப்பொருள் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் சில நாட்களாகவே கஞ்சா கேக் என்ற புதுவகையான போதைப் பொருள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த தகவல் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் 27 வயதான ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்தனர். ரோஷன் என்ற அந்த […]

இத்தாலி நாட்டில் நேற்று பெய்த கனமழையால் 10 பேர் பலியாகி உள்ளனர். இததாலியில்  மிக பயங்கரமான இடி மின்னலுடன் பெய்த கன மழைக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மரங்கள், இருசக்கர வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. 8 வயது சிறுவன் உள்பட 4 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. சிலர் தப்பித்தோம் , பிழைத்தோம் என உயிர் பிழைத்துள்ளனர். இதில் பெண்மணி ஒருவர் தன் கையில் குழந்தையுடன் இருந்துள்ளார். பெரு […]

அமெரிக்காவில் உலகின் முதல் பறக்கும் பைக்கை ஜப்பானின் ஏர்கின்ஸ் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் டெட்ராய்டில் வாகன கண்காட்சி நடைபெற்றது. இதில் உலகின் முதல் பறக்கும் பைக் கண்காட்சியில் வைக்கப்பட்டது. தொடர்ந்து 40 நிமிடங்கள் பறக்கும் கொண்ட இந்த பைக் சுமார் 6 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கை பார்த்தவர்கள் இதன் திட்டத்தை ஆர்வத்துடன் கேட்டறிந்தனர். நேரில் பார்த்தவர்கள் இதை நம்ப முடியவில்லை என கருத்து தெரிவித்துள்ளனர். வருங்காலத்தில் […]