fbpx

மும்பையின் முலுண்டின் புறநகர் குடியிருப்பில் வசித்து வருபவர் 21 வயதான ஜெயேஷ் பஞ்சால். இவருக்கும் இவரது தாய்க்கும் சொத்து சம்மந்தமாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் நேற்று அவரது 46 வயதான தாயை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் ஆத்திரத்தில் தாயை கொலை செய்ததால், தானும் இனி உயிருடன் இருக்க விரும்பாமல், தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் முலுண்ட் ரயில் நிலையத்திற்கு வந்த ஜெயேஷ் பஞ்சால் அங்கு வந்துகொண்டிருந்த […]

நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் ஜனாதிபதி மற்றும் உள்துறை அமைச்சகமும் எடுக்கும் முடிவுகளை பொறுத்து தங்களது அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருவெறும்பூர் முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கொரோனா சிறப்பு மருத்துவ முகாமினை பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”சாலை விபத்துகளில் காயம் அடைவோர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கு கட்டணமின்றி சிகிச்சை அளிக்கும் வகையில் […]

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட வானிலை அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று வானம் மேகமூட்டத்துடன் கானப்படும், மேலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது. அதேபோல், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் […]

தட்டச்சு பயிற்சிக்கு சென்ற மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று, தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அடுத்த பாளையம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆசிரியரின் மகள் 12ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு தினமும் தட்டச்சு பயிற்சி வகுப்புக்கு சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று தட்டச்சு பயிற்சி வகுப்புக்கு சென்ற அந்த மாணவி பின்னர் வீடு திரும்பவே இல்லை. இதனால் […]

தமிழ் மக்கள்போல தமிழில் பேச வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார். வேலூரில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக 1806ஆம் ஆண்டு போராடி உயிர்நீத்த சிப்பாய்களுக்கு வீரவணக்கம் செலுத்தி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், “மதம், பொருளாதாரம், இடத்தின் காரணமாக ஆங்கிலேயர்கள் நம்மைப் பிரித்து ஆண்டனர். ஆங்கிலேயர்கள் ஆளும் முன்னர் பல மன்னர்கள் […]

ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் வைப்புதாரர்கள் பணம் செலுத்தியதற்கான ஆவணங்களுடன் சென்னை மாவட்ட வருவாய் அலுவலரை அணுகும்படி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற நிறுவனம், தமிழகம் முழுவதும் 13 இடங்களில் கிளைகளை துவங்கி, தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் தோறும் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறி, ரூ.1,678 கோடி வரை வசூலித்துள்ளது. […]

திருப்புவனம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி அமர்ந்திருந்த இருக்கையை மருத்துவர் எட்டி உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே ரயில்வே பீடர் பகுதியைச் சேர்ந்தவர் சவுந்தர்யா. கர்ப்பிணியான இவர், தனக்கு காலில் அடிபட்டதால் சிகிச்சைப் பெறுவதற்காக நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் திருப்புவனம் அரசு மருத்துவனைக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு பணியில் இருந்த மருத்துவர் பாலகிருஷ்ணன், சவுந்தர்யாவை பரிசோதித்து விட்டு அவசர நோயாளி பிரிவுக்கு […]

தனிக்கட்சி ஆரம்பித்த சசிகலா சகோதரர் திவாகரன் மீண்டும் தன் சகோதரியுடன் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணியினர் தனித்தனியாக பிரிந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கும் பொருட்டு, அவரது அணித் தரப்பில் நாளை பொதுக்குழு நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஓபிஎஸ் அணி அவர்களை எதிர்த்து தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு […]

அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைதூர ஆன்லைன் படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையம் வாயிலாக எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்.சி.(கம்ப்யூட்டர் சயின்ஸ்) படிப்புகள் தொலைதூரக் கல்வி முறையில் வழங்கப்படுகின்றன. பொது மேலாண்மை, தொழில்நுட்ப மேலாண்மை, விற்பனை மேலாண்மை உட்பட 8 பாடப்பிரிவுகளில் வழங்கப்படும் எம்.பி.ஏ. படிப்பில் நடப்பு ஆண்டில் சேர ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ‘டான்செட்’ அல்லது தொலைதூரக் கல்வி நுழைவுத் […]

அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நாளை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் ஸ்ரீவாரு மண்டபத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 23ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக எழுந்த உட்கட்சி பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் போது இந்த பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தற்போது நாளை நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் […]