fbpx

உள்ளாட்சி இடைத்தேர்தலில் பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரமேல் ஊராட்சி 3-வது வார்டில் கூடுதல் வாக்குகள் பதிவாகி இருப்பதாக புகார் எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரமேல் ஊராட்சியில் 3-வது வார்டு உறுப்பினருக்கான பதவி காலியாக இருந்ததால் நேற்று காலை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, சுயேட்சை என 3 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். மொத்தம் 343 வாக்காளர்கள் உள்ள இந்த வார்டில் காலை முதல் விறு, […]

தமிழகத்தில் வரும் 13ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வரும் 12 , […]

ஜிஎஸ்டி பிரச்சனைகளுக்கு தீா்வு காணாவிட்டால், நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய வணிகா் சம்மேளனத்தின் (சிஏஐடி) பொதுச்செயலாளா் பிரவீன் கண்டேல்வால் அறிவித்துள்ளார். தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பிரவீன் கண்டேல்வால் செய்தியாளா்களிடம் பேசுகையில், ”பிராண்ட் அல்லாத பாக்கெட் செய்து சீலிடப்பட்ட அரிசி, கோதுமை, தயிா், […]

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, சேமித்தல், வினியோகம், விற்பனை ஆகியவற்றுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் தடை விதித்துள்ளது. எனவே, பிளாஸ்டிக் குச்சிகள், கொடிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், அலங்காரத்திற்காக பயன்படுத்தப்படும் ‘பாலீஸ்டைரீன்’ என்ற தெர்மாகோல் ஆகியவற்றுக்கு […]

திருச்சி மற்றும் காரைக்குடி முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவைகள் அனைத்தும் தற்போது மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், திருச்சி – காரைக்குடி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது. திருச்சி – காரைக்குடி சிறப்பு ரயில் (06887) மற்றும் காரைக்குடி – திருச்சி சிறப்பு ரயில் (06888) ஜூலை […]

ஒரே பிராண்டின் கீழ் தயாரிக்கப்படும் எண்ணெய்-க்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியா சமையல் எண்ணெய் தேவையில் 60 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. ஆனால், ரஷ்யா – உக்ரைன் போர், இந்தோனேசியா, மலேசியாவில் பாமாயில் ஏற்றுமதிக்கு தடை போன்றவற்றால் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இந்தோனேசியாவில் பாமாயில் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு நீக்கப்பட்டதை அடுத்து, சர்வதேச அளவில் […]

தமிழ்நாடு முழுவதும்‌ கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில்‌ கட்டுபடுத்திட தமிழக முதல்வர்‌ ஆணையின்படி “மெகா தடுப்பூசி முகாம்‌” நடத்தப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில்‌ கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்திட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள்‌ மற்றும்‌ நடவடிக்கைகள்‌ எடுத்து வருகிறது. 6-ம் தேதி வரை தருமபுரி மாவட்டத்தில்‌ 12 வயதுக்கு மேல்‌ முதல்‌ தவணை 1,14,087 பயனாளிகளுக்கும்‌. இரண்டாம்‌ தவணை […]

தமிழக அரசு அறிவித்த மாணவியர்களுக்கு 1,000 ரூபாய் ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கும் தேதி இன்றுடன் நிறைவடைகிறது. இது குறித்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தில் மாணவியர்களின் விபரங்களை ஜூன் 30-ம் தேதி வரையில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. பின்னர், இதற்கான காலக்கெடு ஜூலை 10-ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. 2021-22 ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவியர்களும் https://penkalvi.tn.gov.in/ என்ற […]

10 மற்றும் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனர் வெளியிட்டுள்ள ஆணையில்;  பள்ளிக்கல்வித்துறையில் பொதுத் தேர்வில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் தேர்ச்சிப் பெறும் மாணவர்களுக்கு 2011-ம் ஆண்டு முதல் பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பு பதிவு செய்யப்பட்டது. இதன் மூலம் மாணவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு […]

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூலம் சேவை கட்டணம் வசூலிக்கப்படுவது  தொடர்பாக வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை அமல்படுத்துவதை உறுதி செய்யுமாறு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான புகார்கள் பெறப்பட்டால், மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதல் மீறல் தொடர்பாக விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள மாவட்ட […]