fbpx

இளையராஜாவுக்கு நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டது குறித்து விவாதப் பொருளாக மாறிய நிலையில், அவரை விட்டு விடுங்கள் என்றும் அரசியல் விளையாட்டை அரசியல்வாதிகளோடு நடத்துங்கள் என்றும் திமுக நாளிதழான முரசொலியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. திமுக நாளிதழான முரசொலியில் வெளிவந்த செய்தியில், ”இசைஞானி இளையராஜா ஒரு உண்மை படைப்பாளி. அவரை விவாதப் பொருளாக்கி, அவர் இலக்கை மடைமாற்றி திசை திருப்பாதீர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இளையராஜாவுக்கு நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்ட செய்தியை ஒருசிலர் […]

மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்கள், ஆன்மீக வியாதிகள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும், முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கவும், புதிய திட்டங்களை அடிக்கல் நாட்டவும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருவண்ணாமலை மாவட்டம் சென்றுள்ளார்.. ரூ.70.27 கோடி செலவில் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர், ரூ.340.21 கோடி மதிப்பிலான 246 திட்டங்களை அடிக்கல் நாட்டினார்.. இதைத் தொடர்ந்து நடைபெற்ற அரசு விழாவில் பேசிய ஸ்டாலின் […]

தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா, கேரளா மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.. நாட்டின் சில பகுதிகளில் அடுத்த சில நாட்களில் மிகவும் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் மற்றும் டெல்லியில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்தியா வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.. இதனிடையே மகாராஷ்டிராவில் மிகவும் அதிக கனமழை பெய்யும் என்பதால் அங்கு ரெட் அலர்ட் […]

அதிமுக பொதுக்குழு நாளான்றே எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை வர இருப்பதால், அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, தாம் பொறுப்பு வகித்து வந்த நெடுஞ்சாலைத்துறையில் பல்லாயிரக்கணக்கான ரூபாய் டெண்டர்களை முறைகேடாக தமது சம்பந்தி மற்றும் அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்களுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதிமுக ஆட்சியில் ரூ.3,120 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை […]

நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 54 கல்குவாரிகளில் விதிமீறல்கள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, மாவட்டம் முழுவதும் உள்ள 55 குவாரிகளையும் முழுமையாக ஆய்வு செய்து விதிமீறல்களை கண்டறியுமாறு ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, குவாரிகளை ஆய்வு செய்து அதன் அறிக்கையை ஆட்சியரிடம் சமர்பித்தது. அதில், மாவட்டத்தில் மொத்தம் உள்ள […]

விலையில்லா பாடப்புத்தகங்கள் விநியோகம் பல இடங்களில் சரிவர வழங்கப்படவில்லை என்ற புகாரை அடுத்து, புத்தக விநியோகம் குறித்து வரும் 15ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தவுள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் கடந்த ஜூன் 13ஆம் தேதி திறக்கப்பட்டன. பள்ளிகள் திறந்து ஒரு மாதம் ஆகப்போகும் நிலையில், மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் பல இடங்களில் சரிவர வழங்கப்படவில்லை என புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் […]

கர்நாடக மாநிலம் விஜயபுரம் பகுதியில் பல்வேறு இடங்களில் இன்று காலை 2 முறை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.. காலை 6.22-க்கு 4.9 என்ற ரிக்டர் அளவிலும், 6.24 மணிக்கு 4.6 என்ற ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.. இந்த நிலநடுக்கம் 5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.. கர்நாடகாவில் கடந்த 15 நாட்களில் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.. எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக உயிர் […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.37,512-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து […]

திருமண வரன்களை தடுப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல், குளச்சல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இளைஞர்களுக்கு பெண் பார்க்க, பெண் வீட்டார் விசாரிக்க வரும்போது சிலர் புறம் பேசி திருமண வரன்களை தடுப்பது தொடர் கதையாகி வருகிறது. இதனால், இளைஞர்கள் தங்கள் மனக் குமுறல்களை வெளிப்படுத்தும் விதத்தில் வரன்களை தடுக்கும் நல் உள்ளங்களுக்கு நன்றி, இப்படிக்கு திருமணம் ஆகாத வாலிபர்கள் சங்கம் என்று […]

ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கியுள்ளதைத் தொடர்ந்து எலான் மஸ்க் மீது வழக்குத் தொடரப்போவதாக ட்விட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ‘டெஸ்லா’ நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க், உலகின் மிகப் பெரும் பணக்காரராக உள்ளார். இவர், ட்விட்டர் சமூக வலைத்தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குவதாக அறிவித்திருந்தார். ட்விட்டர் நிர்வாகம் மற்றும் எலான் மஸ்க் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தம் உறுதியானதாகவும் தகவல்கள் வெளிவந்தன. எனினும், […]