நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சவுக்கு சங்கருக்கு ஆதரவாக டிவிட்டரில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் யூ டியூப் வீடியோக்களில் பல்வேறு அரசியல் தலைவர்கள், சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து அதிரடியான கருத்துக்களை தெரிவித்ததன் மூலம் பிரபலமானவர்.. சமீபத்தில் யூ டியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் நீதித்துறையை விமர்சித்திருந்தார்.. அதாவது ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என்று […]
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம் என்று தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெறும் முறை கைவிடப்பட்டு, ஆன்லைனில் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக […]
அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.. இதுதவிர சவுக்கு என்ற யூடியூப் சேனலையும் அவர் நடத்தி வருகிறார்.. இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என்று கூறியிருந்தார்.. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.. மேலும், சவுக்கு சங்கர் மீது ஏன் குற்றவியல் நீதிமன்ற […]
இன்றைய காலக்கட்டத்தில் பலருக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் பிரச்சனை உள்ளது. இது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. கொலஸ்ட்ரால் அதிகரிப்பு காரணமாக, இதய நோய்கள் மற்றும் மாரடைப்புக்கான வாய்ப்புகள் கணிசமாக அதிகரிக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, கொலஸ்ட்ராலை அதிகரிக்க பல விஷயங்கள் காரணமாகின்றன. கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும் இதுபோன்ற விஷயங்களைப் பற்றி தற்போது பார்க்கலாம்.. எண்ணெயில் பொரித்த பொருட்களை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இந்த உணவுகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எண்ணெய் பொருட்கள் […]
சென்னை – அந்தமான் இடையே கண்ணாடி இழை தொலைபேசி & இண்டர்நெட் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. போர்ட் பிளேரின் மினிவேயில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எல்.முருகன் , ஜன்தன் கணக்கு தொடங்க வைத்தது இந்த அரசின் முதல் சீர்திருத்தம் என்றார். 100% மண்ணெண்ணெய் பயன்பாடில்லா மாநிலமாக அந்தமான் திகழ்கிறது. 100% எல்இடி மின்விளக்குகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னை – அந்தமான் இடையே கண்ணாடி இழை தொலைபேசி & இண்டர்நெட் வசதி […]
பூமியில் பல ஆபத்தான, மர்மமான மற்றும் அற்புதமான இடங்கள் உள்ளன. அவை பற்றி விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ஆனால் இன்னும் கூட, ஒரு சில மர்மங்களின் முடிச்சு அவிழ்க்கப்படவில்லை. இன்று நாம் பார்க்கப் போவதும் அப்படி ஒரு மர்ம இடத்தை பற்றி தான்.. ஆப்பிரிக்கா கண்டத்தின் நமீபியா நாட்டில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற வட்ட வடிவிலான திட்டுகள் இன்றும் அறிவியலுக்கு ஒரு புதிராகவே இருக்கின்றன. சமீபத்திய […]
போலியான ஆவணங்களை கொண்டு பதிவு செய்யும் பத்திரங்களை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட பதிவாளர்களுக்கு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு பத்திர பதிவுத்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில், சொத்து குறித்த வில்லங்க விவரங்களை பொது மக்கள் இலவசமாகப் பார்வையிடும் வசதியை சில தனியார் செயலிகள் முறையின்றி பயன்படுத்தி வில்லங்க விவரங்களை அதிக எண்ணிக்கையில் பதிவிறக்கம் செய்வதைத் தவிர்க்கும் நோக்கில் இனிவரும் காலங்களில் […]
தமிழகத்தில் வரும் 19-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது […]
ஐஏஎஸ், ஐபிஎஸ், IFS அலுவலர்களுக்கான தேர்வு நடைபெறும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது; தமிழ்நாடு அரசுப்பணியில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், IFS அலுவலர்களுக்கு அரையாண்டு மற்றும் மொழித்தேர்வு அக்டோபர் 11-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையும், 20-ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக இந்தத்தேர்வுகள் நடைபெறும் தேதிகள் மாற்றம் செய்யப்படுகின்றன. இவர்களுக்கான […]
கட்டிட அனுமதி விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக மட்டுமே பெற்று அனுமதி அளிக்கும் நடைமுறையை அமல் படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் அவர்களின் 2022-2023 நிதி நிலை அறிக்கையில் திட்ட அனுமதி, கட்டடம் கட்டுதல் மற்றும் மனைகள் ஆகியவற்றிற்கு ஒப்புதல் வழங்கும் நடைமுறையை துரிதப்படுத்துவதற்காக மாநில முழுமைக்கும் ஒற்றைச்சாளர முறை இந்த ஆண்டில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டதற்கிணங்க, மனைப்பிரிவு உத்தேசங்கள் இணையதளம் மூலமாக […]