fbpx

10-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவின் மீது மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது. இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற துணைத்தேர்வு முடிவின் மீது மறுகூட்டல் வேண்டி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது தேர்வெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று மதியம் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது. இதில் இடம்பெற்றுள்ளவர்கள் தங்களது […]

அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் நாடுகளுக்கு இடையே எல்லை பிரச்சனை காரணமாக ஏற்பட்டுள்ள மோதலில் இதுவரை 71 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அர்மீனியா – அஜர்பைஜான் நாடுகளுக்கு இடையில் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பரில் போர் தொடங்கியது. ஆறு வாரங்கள் அர்மீனியாவின் கட்டுப்பாட்டில் நாக்ரோனா – கராபாக் ஆகிய மாகாண்ம கைப்பற்றப்பட்டது. இதில் சுமார் 6000த்துக்கு அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது. ரஷ்யா இந்த இருநாடுகளின் போரை 2021ன் தொடக்கத்தில் முடிவுக்கு […]

சென்னை தாம்பரம் அருகே பெற்ற பிள்ளைகளுக்கு பாரமாக இருப்பதாகநினைத்து முதிய தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் அருகே சேலையூரைச் சேர்ந்தவர் ஆனந்தன் (71) . இவரது மனைவி கங்காதேவி (62) . மதுரையை சேர்ந்த இவர்கள் இருவருக்கும் 32 வயதில் ஜெயக்குமர் என்ற மகன் இருக்கின்றார். திருமணமாக அனைவரும் ஒரே வீட்டில் மகிழச்சியாக இருந்துள்ளார்கள். இந்நிலையில் ஆனந்தனுக்கு கண்ணில் குளுகோமா என்ற […]

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை தோல்வியடைந்த நிலையில் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். உலக மகளிர் ஓபன் டென்னிஸ் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றுவருகின்றது. இந்த தொடரில் ஒற்றையர் பிரிவில் அங்கிதா ரெய்னா மற்றும் கர்மன் தண்டி களமிறங்கினார்கள். இதில் முதல் ஆட்டத்திலேயே ஜெர்மன் நாட்டின் தட்சனா மரியா என்பவரிடம் அங்கிதா தோல்வியடைந்தார். முதல் சுற்று ஆட்டத்தில் வெற்றிபெற்ற மற்றொரு வீராங்கனை கர்மன் தண்டி இரண்டாம் […]

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக இருந்தவரும் பிரபல கிரிக்கெட் வீரருமான ஆசாத் ரவூப் மாரடைப்பால் காலமானார். பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆசாத் ரவூப்(66) . இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக பணியாற்றயுள்ளார். இவர் பெரும்பாலும் இந்த தலைமுறையினருக்கு நடுவராகத்தான் அவரை அறிமுகம். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 64 டெஸ்ட் போட்டிகள் , 139 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 28 டி20 போட்டிகளில் அம்பயராக பணியாற்றி […]

குற்றம் நடைபெறாமல் தடுப்பது குறைந்து வருவதாக உயர்நீதிமன்ற நீதிபதி கவலை தெரிவித்துள்ளார். தமிழக காவல்துறை ஆயுதப்படை உதவி ஆய்வாளர்களாக உள்ள முத்துக்குமரன், பார்த்திபன், ரமேஷ், வெங்கடேசன் ஆகியோர் சட்டம் ஒழுங்கு பிரிக்கு மாற்றக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தாரர்கள் 40 வயதை கடந்துவிட்டதால் , மூவரும் துறை ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொண்டதாலும் அவர்கள் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்ற முடியாது […]

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த வீரர் ரோஜர் ஃபெடரர் ஓய்வு அறிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் பிரபல டென்னிஸ் விளையாட்டு வீரர் திடீரென ஓய்வை அறிவித்தது ரசிர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சர்வதேச அளவில் உலகின் நம்பர் ஒன் இடத்தை பெற்ற ரோஜர்.. பல மாதங்களாக டென்னிஸ் போட்டியில் விளையாடவில்லை. கடைசியாக நடைபெற்ற விம்பிள்டன் போட்டியிலும் காயம் காரணமாக அவரால் பங்கேற்கமுடியவில்லை. இந்நிலையில் அவர் எப்போது […]

தங்கப்புதையல் கிடைத்துள்ளதாக கூறிய நபர் குறைந்த விலையில் தருவதாக மளிகை கடை உரிமையாளரை 10 லட்சம் ரூபாய் ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.. கோவை கருமத்தம்பட்டி அருகே வாகராயம்பாளையத்தைச் சேர்ந்தவர் சதாசிவம் இவர் மளிகை கடை நடத்துகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவர் அறிமுகமானார். அவர் தான் கட்டிட வேலை செய்வதாக கூறி சதாசிவத்தின் மளிகை கடையில் அரிசி , பருப்பு போன்ற பொருட்கள் வாங்கிச் சென்றுள்ளார். இந்நிலையில் […]

சென்னையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் , விழாக்காலங்களில் ஏராளமானோர் மார்க்கெட் பகுதி , துணிக்கடை , நகைக்கடை என கூட்டம் கூடுகின்றனர். இதனால் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள கட்டாயம் மாஸ்க் அணிய […]

பீகாரில் சமஸ்திபூரில் ரயில் ஜன்னல் வழியாக செல்போன் திருட முயன்ற இளைஞரை பிடித்தபோது ரயில் நகரத் தொடங்கியதால் அடுத்த ஸ்டேஷன் வரை தொங்க வைத்து அழைத்து வந்த சம்பவம் வைரலாகி வருகின்றது….. பீகார் சமஸ்திபூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்தபோது ஜன்னல் வழியாக திருடன் செல்போனை பிடுங்க முயற்சித்துள்ளான். அப்போது பயணிகள் அவன் கையை இறுகப் பிடித்துக் கொண்டனர். அந்த நேரத்தில் ரயில் நகரத் தொடங்கிவிட்டதும்.. அவன் […]