fbpx

திமுக ஆட்சிக்கு வந்தால், குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அக்கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.. பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டாலும் இந்த திட்டம் எப்போது தொடங்கப்படும் என்று பெண்கள் ஆர்முடன் காத்திருக்கின்றனர்..இதனிடையே பெண்களுக்கு ரூ.1000 உள்ளிட்ட எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.. ஆனால் தேர்தல் வாக்குறுதியின் படி, மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுவது உறுதி என்று முதலமைச்சர் ஸ்டாலின் […]

தமிழகத்தில் வரும் 10-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை […]

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வீர ராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் […]

பொது இடங்களில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு காவல் துறையினர் சார்பில் அபராதம் விதிக்கப்படும் என்று பெருநகர சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களான மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் […]

நியாயவிலை கடைக் பணியாளர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை, சிறப்பு ஊதிய உயர்வு வழங்குவதற்கு முரண்பாடுகள் ஏதுமில்லாத தீர்வுகளை பரிசீலிக்க குழு அமைத்து உத்தரவிடபட்டுள்ளது. கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளுக்குத் தேவையான உணவுப் பொருட்களை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையினரின் மாதாந்திர ஒதுக்கீட்டு ஆணையின்படி, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக கிடங்குகளிலிருந்து எடுத்து நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு செய்து வருகின்றன. […]

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது குறித்து முதன்மை சென்னை மாநகராட்சி ஆணையாளர் சார்பில் திருமண மண்டபங்கள், திரையரங்குகள் மற்றும் வணிக வளாக உரிமையாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது, அதில், பொதுமக்கள் அதிகளவில் உள்ள இடங்களில் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். கடை உரிமையாளர்கள் தங்களுடைய கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன் இருப்பதையும், முகக்கவசம் […]

TET தேர்வு கம்ப்யூட்டர் மூலம் எழுதுவதற்கான பயிற்சி மேற்கொள்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு 2022-ம் ஆண்டிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. முதலில் மார்ச் மாதம் 14-ம் தேதி முதல் விண்ணப்பங்களை பதிவேற்றலாம் என தெரிவிக்கப்பட்டது. மேலும் விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை […]

இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இதனை பிரதமர் மோடி ட்விட்டர் பதிவு மூலம் தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா என்றால் தெரியாதவர்களே இல்லை. 1975 ஆம் ஆண்டு அன்னக்கிளி படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இன்றுவரை மக்கள் மனதில் நீங்காமல் இடம்பிடித்திருப்பவர் அவர். தமிழ் மட்டும் இல்லாமல் பல மொழிகளில் 1000 படங்களுக்கு மேலாக இசையமைத்துள்ளார். இளையராஜா 1981 தமிழக அரசின் கலைமாமணி விருதும், 1988 ஆம் […]

இத்தாலியில் மழையின்மை மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக ஐந்து பிராந்தியங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் கடுமையான வெயில் அங்குள்ள மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கடுமையான வெயிலின் காரணமாக காரணமாக கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக மோசமான வறட்சியை அந்த நாடு சந்தித்து வருகிறது. குறிப்பாக இத்தாலியின் மிக நீளமான நதியான போ நதியை சுற்றியுள்ள ஐந்து வடக்கு பிராந்தியங்கள் வறட்சியால் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. […]

துணை நடிகை ஒருவர், தன்னுடைய மாமனார் தனக்கு பாலியல் தொந்தரவு மற்றும், கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டதாகவும் போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். சென்னையை அடுத்த மாங்காடு அருகே உள்ள கெருங்கம்பாக்கம், பாலகிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர், நிவேதா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் துணை நடிகையாக திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற திரைப்படங்களில் துணை […]