தருமபுரி மாவட்டத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், மானிய விலையில் பாரம்பரிய நெல்விதைகளை வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் பெற்று பயன்பெறலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி தனது செய்தி குறிப்பில்; வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் தருமபுரி மாவட்டத்தில் பாரம்பரிய நெல் விதைகள் 2 மெட்ரிக் டன் 50 சதவீத மானியத்தில் வழங்க அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாரம்பரிய […]
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 500 கோயில்களில் கிரெடிட், டெபிட் கார்டு பயன்படுத்தி அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் இதர சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அமலுக்கு வருகிறது என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. அதன் படி, முதற்கட்டமாக பழநி முருகன் கோயிலில் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்பொழுது மாநிலம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 500 கோயில்களில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு […]
தமிழகத்தில் வரும் 16-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் […]
வணிக நோக்கத்திற்காக ஒரே நேரத்தில் வில்லங்க விவரங்களை பார்க்க பதிவு துறையில் கட்டுப்பாடு. பொதுமக்கள் எளிதாக பார்க்க வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மற்றும் வணிகவரிமற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பதிவுத்துறையின் செயல்பாடுகளைமேம்படுத்துவதற்காக துறையில் பல சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பதிவுத்துறையால் பயன்படுத்தப்பட்டு வரும் ஸ்டார் மென்பொருள் மெதுவாக இயங்குவதாகவும் சொத்துகுறித்த வில்லங்க விபரங்களை பதிவுத்துறையின் இணையதளத்திலிருந்து இலவசமாகப் பார்வையிடுவதில் சிரமம் இருப்பதாகவும் பொதுமக்களிடமிருந்து புகார் […]
லம்பி வைரஸ் பரவுவது அதிகாரிகளின் முக்கிய கவலையாக மாறியுள்ளது. நாடு முழுவதும் வழக்குகள் அதிகரித்து வருவதால், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மாநில கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளை விழிப்புடன் இருக்கவும், கால்நடைகளுக்கு கட்டி தோல் நோய் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொண்டார். இந்த நோய் மாநிலத்தின் பல மாவட்டங்களில் பதிவாகியுள்ளது மற்றும் இந்த பிரச்சினை பகலில் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்று முதலமைச்சர் அலுவலகத்தின் அறிக்கை […]
இன்று காலை 10 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது. தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10 மணியளவில், அனைத்துத்துறை செயலாளர்களுடன் துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு துறை வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் தற்போதைய நிலை, செயல்படுத்தப்பட்டு வரக்கூடிய திட்டங்கள், வரும் காலத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் […]
கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். . தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை ஆங்காங்கே பெய்துவருகின்றது. நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் இன்று காலை முதலே கனமழை பெய்து வருகின்றது. இதனால் நாளை இந்த தாலுகாக்களுக்குள்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி கூடலூர் , பந்தலூரில் 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கனமழையால் பொன்னானி ஆற்றில் […]
இயக்குநராக இருந்து நடிகராக மாறிய எஸ்ஜே. சூர்யா….. இயக்குனர் சங்கரின் ராம்சரன் நடிக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். இதன் படப்பிடிப்பு கடந்த சனிக்கிழமை தொடங்கிவிட்டதாகவும் ஏற்கனவே படப்பிடிப்பில் இணைந்துள்தாகவும் கூறியுள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் “ நான் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்தபோது இயக்குநர் ஷங்கர் படத்தின் செட்களை எட்டிப்பார்ப்பேன், பின் அவர் நண்பன் படத்தில் ஒரு கேமியோ செய்தேன், இப்போது அவர் […]
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ரவிச்சந்திரனுக்கு 11-வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி சூரப்பநாயக்கன் பட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரனின் தாயார் , தனக்கு வயதாகிவிட்ட காரணத்தால் உதவியாக இருக்க ரவிச்சந்திரனை பரோலில் விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அவருக்கு நவம்பர் 17 முதல் 30 நாட்களுக்கு பரோல் வழங்கியது. இதையடுத்து மதுரை சிறையில் இருந்த ரவிச்சந்திரன் .. காவல்துறையினரின் பலத்த […]
ஜே.இ.இ.தேர்வுக்கு இனி அரசுப் பள்ளிகளிலேயே பயிற்சி வழங்கப்படும் என ஐ.ஐ.டி. இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் பத்திரிகையாளர்களிடம் அவர் கூறுகையில் , ’’ ஐ.ஐ.டியில்சேர இனி மதிப்பெண் மற்றும் ரேங்க் தேவையில்லை . மாணவர்கள் மதிப்பெண்களை பொருட்படுத்த வேண்டாம். எனவே நுழைவுத் தேர்வு அல்லது இது போன்ற தேர்வுகளுக்கு நீங்கள் தயாரானாலே போதுமானது .’’ ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார். சென்னையில் ’’ஜீரோ கார்பன் சேலஞ்ச் 22 ’’போட்டி தொடங்கப்பட்டுள்ளது. […]