உலகளவில் குரங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. சுமார் 75 நாடுகளில் இருந்து 16,000 க்கும் மேற்பட்டோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.. இந்தியாவில் கேரளாவில் 3 பேர், டெல்லியில் ஒருவர் என 4 பேருக்கு பாதிப்பு பதிவாகியுள்ளன.. குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மாநிலத்திற்குள் நுழைவதைத் தடுக்க விமான நிலையங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.. இதனிடையே ஆந்திர மாநிலம் குண்டூரில் 8 வயது சிறுவனுக்கு குரங்கு நோய் அறிகுறி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அச்சிறுவன் குண்டூர் […]
வங்கி கடன்களுக்கான வட்டியை 0.25 சதவீதம் உயர்த்துவதாக ஹெச்.டி.எஃப். சி வங்கி தெரிவித்துள்ளது. நாட்டின் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் அவ்வபோது கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன.. இதனால் கடன் வாங்கியவர்கள் ஏற்கனவே சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.. இந்நிலையில் கடன் வாங்கியவர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி அறிவிபுப் வெளியாகி உள்ளது.. ஆம்.. நாட்டின் முக்கியமான வங்கிகளில் ஒன்றான ஹெச்.டி.எஃப்.சி வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது.. வங்கி கடன்களுக்கான வட்டியை […]
அட்லாண்டிக் பெருங்கடலின் அடிப்பகுதியில் கிட்டத்தட்ட “சரியாக சீரமைக்கப்பட்ட” துளைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர், இது அவர்களை குழப்பமடையச் செய்துள்ளது. தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (NOAA) Okeanos Explorer கப்பலின் குழுவினர், கடல் மேற்பரப்பிற்கு அடியில் 2.6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மத்திய-அட்லாண்டிக் ரிட்ஜின் ஆய்வுகளின் போது துளைகளைக் கண்டறிந்தனர். கணக்குகளின்படி, துளைகள் கணிசமான அளவு தூரத்தில் வழக்கமான இடைவெளியில் தோன்றின, ஆனால் எந்த நிபுணராலும் அவற்றின் மூலத்தை விளக்க […]
தேனியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வரவேற்றனர்.. ஓ அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.. மேலும் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.. இதே போல் இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கி ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டார்.. மேலும் ஓபிஎஸ் இடம் இருந்த எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியும் பறிக்கப்பட்டு, அந்த பதவி […]
நேபாளத்தின் காத்மாண்டுவில் இன்று காலை ரிக்டர் அளவுகோலில் 6.0 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து 147 கிமீ தொலைவில் கோட்டாங் மாவட்டத்தின் மார்டிம் பிர்டாவைச் சுற்றி காலை 8.13 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் (NEMRC) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் ஆழம் கிழக்கு நேபாளத்தில் 10 கிமீ தொலைவில் கண்காணிக்கப்பட்டது, இது 27.14 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் […]
பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நாளை முதல் செயலியில் வருகைப்பதிவு செய்ய வேண்டும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகள், நடுநிலை பள்ளிகள் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும், தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு கோருதல், அனுமதி மற்றும் பிற பணி சார்ந்த தேவைகளுக்கு எழுத்துப்பூர்வமாக தங்கள் உயர் அலுவலர்களிடம் நேரடியாக சென்று […]
காவல்துறை தலைமை இயக்குனர் முதல் காவலர் வரை அனைவருக்கும் தமிழ்நாடு அரசு காவல்பதக்கம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக காவல்துறைக்கு குடியரசு தலைவரின் கவுரவக் கொடி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.. சென்னை எழும்பூரில் நடைபெற்ற நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொடியை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ஒப்படைத்தார்.. ராணுவம், காவல் துறைக்கு வழங்கப்படும் உயரிய கௌரவமே குடியரசு தலைவர் கொடி.. இதுவரை 10 மாநில போலீசாருக்கு […]
12 வயது சிறுவன், யூடியூப் வீடியோவைப் பார்த்து, ஒயின் தயாரித்து, தனது வகுப்புத் தோழர்களுக்கு வழங்கி உள்ளார்.. மதுவை அருந்திய சக மாணவர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. இச்சம்பவம் கேரளாவின் சிராயின்கீழு பகுதியில் உள்ள முருக்கும்புழா அரசு உயர்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை காலை நடந்தது. மது அருந்திய சிறுவனின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், பின்னர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அரசுப் பள்ளியில் நடந்ததாகவும், […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 19,673 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 45 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 20,408 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]
இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணிக்கு மத்திய அல்லது மாநில அரசு பாடத்திட்டங்களின் கல்வி நிலையங்களில் Engineering, Technology பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த Technician (Diploma) Apprentices, Graduate Apprentices பணிக்கு 31 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு அவசியம் இல்லை. இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும் […]