தமிழகத்தில் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை கனமழைக்க வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக இன்று ; தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்; நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் […]
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் விடுதிகளில் தங்கி பயல மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டதில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் தருமபுரி அரசு கலைக்கல்லூரி அருகில் ஒரு கல்லூரி மாணவர் விடுதியும், 2 கல்லூரி மாணவியர் விடுதிகளும் மற்றும் காரிமங்கலம் வட்டம், பெரியாம்பட்டியில் ஒரு கல்லூரி மாணவியர் விடுதி என […]
அடுத்த ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திடக் கோரி பிரதமரருக்கு முதலவர் கடிதம் எழுதி உள்ளார். சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு உரிய உத்தரவாதங்களை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விரைவில் வழங்கிட உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி, பிரதமரருக்கு முதலவர் எழுதியுள்ள கடிதத்தில், சென்னையில் நடைபெற்ற ( 44-வது சர்வதேச சதுரங்க […]
உலகளவில் குரங்கு அம்மை பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் நோய்க்கான புதிய அறிகுறிகளை நிபுணர்கள் அறிவித்துள்ளனர். உலகளவில் குரங்கு அம்மை பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், உலகம் முழுவதும் உள்ள மருத்துவ வல்லுநர்கள் இந்த நோயை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இது உலகளாவிய அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் முக்கியமாக பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள், ஓரின சேர்க்கை கொள்ளும் ஆண் மூலம் பரவுகிறது என்பதை அனைத்து ஆதாரங்களும் சுட்டிக்காட்டுகின்றன. தற்பொழுது குரங்கு […]
கோட்டை மாரியம்மன் திருக்கோவில் ஆடித்திருவிழா தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 10-ம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சேலம் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவில் ஆடித்திருவிழா தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 10.08.2022, புதன்கிழமை அன்று உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை […]
நியாய விலைக்கடைகளில் விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களின் கசிவு மற்றும் தரையில் சிந்தும் பொருட்கள், மீண்டும் விநியோகம் செய்யக்கூடாது என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவுத்துறை அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியதாவது; நியாய விலைக்கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசியின் தரத்தினை அனுப்பும் இடங்களிலேயே சரிபார்த்து தரமானஅரிசியை மட்டுமே நியாய விலைக்கடைகளுக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்துகொள்ள வேண்டும். நியாய விலைக்கடைகள் உட்புறமும் வெளிப்புறமும் தூய்மையாக இருப்பதை உறுதிப்படுத்த […]
மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல் வெற்றியை இந்தியா பதிவு செய்துள்ளது. இந்திய வீரர் ரோனக் சத்வானி, ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த சேர்ந்த அப்துல் ரகுமானை முதல் சுற்று ஆட்டத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன்மூலம், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல் வெற்றியை இந்தியா பதிவு செய்துள்ளது. ஓபன் பிரிவில் வெள்ளை நிறக் காய்களுடன் இந்திய வீரர் சத்வானி விளையாடினார். இவர் இந்திய […]
ஜூலை 31ஆம் தேதிக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லையென்றால், ரூ.5,000 அபராதம் செலுத்த நேரிடும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. வங்கிக் கணக்கு வழியாக மாத ஊதியம் பெறுவோரும், தொழில் முனைவோரும், வருவாய் ஈட்டுவோரும் ஆண்டுக்கு ஒருமுறை வருமான வரி விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். மார்ச் மாதத்துடன் நிறைவடையும் நிதி ஆண்டுக்கான விவரங்களை அதே ஆண்டு ஜூலை 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். இது வருமான […]
தனது வகுப்பில் படிக்கும் சிறுவனை மிரட்டி மசாஜ் செய்ய வைத்த உதவி ஆசிரியையின் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் உள்ள போகாரி தொடக்கப் பள்ளியில் ஊர்மிளா சிங் என்பவர் உதவி ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். இவர், தனது வகுப்பில் படிக்கும் சிறுவன் ஒருவனை அழைத்து, ”எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. அதனால், என்னுடைய கைகளைப் பிடித்துவிடு” என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அந்தச் […]
’வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்கள் தமிழகத்தில் பயிற்சி பெற வெறும் ரூ.30 ஆயிரம் கட்டினால் போதும்’ என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் 97 சதவீதம் பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இரண்டாம் தவணை தடுப்பூசியை பொறுத்தவரை 85.80 சதவீதம் பேர் செலுத்தியுள்ளனர். அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இரண்டு வாரத்திற்கு ஒரு […]