காமன்வெல்த் போட்டியில் பாரா பளுதூக்குதல் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் சுதிர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 29ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், 72 நாடுகளை சேர்ந்த 5,054 வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். இந்தியாவை சார்ந்த 111 வீரர்கள் மற்றும் 104 வீராங்கனைகள் என மொத்தம் 215 பேர் 16 விதமான விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்றுள்ளனர். அந்த வகையில், […]
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி 2 ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஸ்மிருதி மந்தனா பெற்றுள்ளார். பார்படாஸ் அணிக்கு எதிரான காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் போட்டியில் முதல் 5 ரன்களை எடுத்ததன் மூலம் அவர் இந்த சாதனையை படைத்தார். இந்திய ஆடவர் அணியின் துவக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா 2, 973 ரன்கள் எடுத்து சர்வதேச டி20 கிரிக்கெட் […]
விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கைது செய்யப்பட்டார்.. வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து காங்கிரஸ் கட்சி இன்று நாடு தழுவிய போராட்டம் நடத்தி வருகிறது.. எனினும் டெல்லியில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கவில்லை. மேலும், ஜந்தர் மந்தர் தவிர டெல்லியின் அனைத்து இடங்களிலும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறி நாடாளுமன்ற வளாகத்தில் […]
திருச்செந்தூர் அருகே காதலியை கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு காதலன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூர் அருகே நா.முத்தையாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மகள் வனசந்தியா (20). இவர் உடன்குடி அருகே ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படித்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் கார்த்திக் (21). இவர், ஆட்டோ ஓட்டுநராக வேலைப் பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். […]
இணையவழி சூதாட்டத்தை முற்றாகத் தடை செய்யும் சட்டத்தினை இயற்ற திமுக அரசு இன்னும் தயங்குவது ஏன்? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் சுரேஷ் இணையவழி சூதாட்டத்திற்கு அடிமையாகி, லட்சக்கணக்கில் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். தற்கொலைக்கு முன் தம்பி எழுதிய […]
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீட்டு அட்டையை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் புதிய காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டது. இதனை, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், ”228 ஆண்டுகள் கடந்த ஒரு பழமையான அமைப்பு கீழ்பாக்கம் அரசு மனநல […]
ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் 3,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் கட்டி தோல் நோயால் இறந்துள்ளன. ராஜஸ்தானில், ஒன்பது மாவட்டங்களில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. பார்மர், ஜலோர், ஜோத்பூர், பிகானர், பாலி, கங்காநகர், நாகௌர், சியோரி மற்றும் ஜெய்சால்மர் ஆகிய பகுதிகளில் மொத்தம் 2,500 கால்நடைகள் இறந்துள்ளன. கடந்த மாதம், குஜராத்தில் 977 கால்நடைகள் இந்த நோயால் உயிரிழந்ததாக அம்மாநில விவசாய அமைச்சர் கூறினார். கட்டி தோல் நோய் தொடர்பாக ராஜஸ்தான் […]
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார். முல்லைப் பெரியாறு அணை கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் இருந்தாலும் அந்த அணையின் பராமரிப்பு உள்ளிட்டவை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்குமாறு முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் கடிதம் எழுதியுள்ளார். […]
குழந்தையின் நினைவாற்றலுக்கும், அவர்கள் சிறப்பாக கவனம் செலுத்தவும் சரியான சீரான உணவு அவசியமாகிறது. பள்ளி, வீடு, விளையாட்டு மைதானம் என எங்கிருந்தாலும் துருதுருவென, சுறுசுறுப்பாக இருக்கும் குழந்தைகளுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. எனவே நல்ல ஊட்டச்சத்தை புறக்கணிப்பது அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தின் பல்வேறு விதங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது…. பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்பது, வாழ்க்கைமுறை நோய்களைத் தடுக்கவும், சிறந்த நினைவாற்றல், மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவும். […]
சிவகங்கை கச்சநத்தம் கிராமத்தில் 3 பேர் கொலை வழக்கில் 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 28-ம் தேதி நள்ளிரவில், ஆதி திராவிடர்கள் வசிக்கும் பகுதிக்குள் ஆயுதங்களுடன் புகுந்த ஒரு பிரிவினர், சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய மூவர் கொலை செய்யப்பட்டனர். 5 பேர் படுகாயமடைந்தனர். […]