fbpx

“ஆவின் பால் எடை குறைந்த விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி நாட்டு மக்களுக்கு உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும் என்றும் துறை ரீதியான விசாரணையால் நியாயம் கிடைக்காது” என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட கட்சியின் […]

தமிழகம் மற்றும் புதுவையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”தென்மேற்கு பருவமழை பொருத்தவரையில் கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் நேற்று வரையிலான காலக்கட்டத்தில் தமிழகம், புதுவையில் 242 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இந்த கால கட்டத்தில் இயல்பான மழையளவு 125 மி.மீ ஆகும். […]

குஜராத்தில் முன்னணி தொழில் குழுமத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.1,000 கோடி கருப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குஜராத்தை தளமாக கொண்டு முன்னணி தொழில் குழுமம் ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த தொழில் குழுமம் ஆபரணங்கள், ஜவுளி, ரசாயனம், பேக்கேஜிங், ரியல் எஸ்டேட், கல்வி என பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிறுவனம் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சமீபத்தில் […]

எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை உறவினர்கள், நண்பர்களுக்கு சட்டவிரோதமாக வழங்கி ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக கடந்த 2018ஆம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார். இதையடுத்து, புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு […]

வைகை அணை நிரம்பியதை அடுத்து 5 மாவட்ட மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணையின் முழு கொள்ளளவு 71 அடியாக உள்ளது. முல்லைப் பெரியாறு அணை மற்றும் வைகையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேகமலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. நேற்று காலை வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால், […]

‘புல்லட் ரயில்’ திட்டத்தின் வேகமாக நடைபெற்று வருவதாக என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார். நாட்டின் முதல் புல்லட் ரயில் 2026 ஆம் ஆண்டுக்குள் இயக்கப்படும் என்று வைஷ்ணவ் அறிவித்தார். இந்த புல்லட் ரயில் திட்டத்தின் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இத்திட்டத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.. மேலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக நாட்டின் […]

நாடாளுமன்றத்தில் தடை செய்யப்பட்ட வார்த்தையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பயன்படுத்தியது குறித்து எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் இரு அவைகளிலும் எம்பிக்கள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய பட்டியலை மக்களவை செயலகம் வெளியிட்டது. அதில், ஊழல், நாடகம், கபட நாடகம், வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், முதலைக் கண்ணீர் உள்ளிட்ட வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக சேர்க்கப்பட்டன. இதற்கு […]

சுதந்திர தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாகவும், முக்கிய பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும்படியும், கர்நாடகா உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டை வெகு விமரிசையாக கொண்டாடுவதற்கு மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்கள், சமீப காலமாக கர்நாடகாவில் அடிக்கடி கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதை […]

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நாம் பெரும்பாலும் பல தேவைகளுக்கு ஸ்மார்ட்போன்களை அதிகமாக பயன்படுத்துகிறோம்.. அத்தகைய சூழ்நிலையில், அனைவரின் தொலைபேசிகளிலும் பல செயலிகள் இருக்கும். அதிகாரப்பூர்வ தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள் மூலம் ஹேக்கர்கள் தகவல்களை திருடுகின்றனர். அதாவது, ஹேக்கர்கள் ஸ்மார்ட்போன் பயன்பாடுகளை ஹேக்கிங்கிற்கான வழிமுறையாக மாற்றி, பின்னர் மக்களின் விவரங்களை எளிதாக அணுகுகிறார்கள். அந்த வகையில் சில ஆபத்தான ஸ்மார்ட்போன் செயலிகள் உள்ளதாக தகவல் வெளியாகிறது.. அவற்றை நீங்கள் […]

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஒகேனக்கல்லில் இரண்டாது முறையாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கே.எஸ்.ஆர். அணையில் இருந்து வினாடிக்கு 35,629 கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து 9,250 கனஅடி நீரும் திறந்து […]