பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நாளை முதல் செயலியில் வருகைப்பதிவு செய்ய வேண்டும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகள், நடுநிலை பள்ளிகள் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும், தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு கோருதல், அனுமதி மற்றும் பிற பணி சார்ந்த தேவைகளுக்கு எழுத்துப்பூர்வமாக தங்கள் உயர் அலுவலர்களிடம் நேரடியாக சென்று […]
காவல்துறை தலைமை இயக்குனர் முதல் காவலர் வரை அனைவருக்கும் தமிழ்நாடு அரசு காவல்பதக்கம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக காவல்துறைக்கு குடியரசு தலைவரின் கவுரவக் கொடி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.. சென்னை எழும்பூரில் நடைபெற்ற நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொடியை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ஒப்படைத்தார்.. ராணுவம், காவல் துறைக்கு வழங்கப்படும் உயரிய கௌரவமே குடியரசு தலைவர் கொடி.. இதுவரை 10 மாநில போலீசாருக்கு […]
12 வயது சிறுவன், யூடியூப் வீடியோவைப் பார்த்து, ஒயின் தயாரித்து, தனது வகுப்புத் தோழர்களுக்கு வழங்கி உள்ளார்.. மதுவை அருந்திய சக மாணவர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. இச்சம்பவம் கேரளாவின் சிராயின்கீழு பகுதியில் உள்ள முருக்கும்புழா அரசு உயர்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை காலை நடந்தது. மது அருந்திய சிறுவனின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், பின்னர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அரசுப் பள்ளியில் நடந்ததாகவும், […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 19,673 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 45 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 20,408 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]
இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணிக்கு மத்திய அல்லது மாநில அரசு பாடத்திட்டங்களின் கல்வி நிலையங்களில் Engineering, Technology பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த Technician (Diploma) Apprentices, Graduate Apprentices பணிக்கு 31 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு அவசியம் இல்லை. இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும் […]
புதுக்கோட்டை கோயில் திருவிழாவில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்தனர்.. புதுக்கோட்டை அருகே திருக்கோகர்ணத்தில் அமைந்துள்ள கோகர்ணேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றது.. இன்று காலை தேரை இழுக்க தொடங்கிய சற்று நேரத்திலேயே கோயிலுக்கு அருகே தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.. இதில் காயமடைந்த 6 பேர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக திருவிழா நடைபெறாத நிலையில், […]
மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு பல்வேறு மாநிலங்களுக்கு 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நிலுவைத் தொகை உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒளிமிகு இந்தியா ஒளிமயமான எதிர்காலம் – மின்சாரம் @2047′ திட்டத்தின் நிறைவு விழாவில் பேசிய பிரதமர் மோடி; நாட்டில் மின் நுகர்வு மற்றும் கட்டணங்களைக் குறைப்பதிலும் உஜாலா திட்டம் பெரும் பங்காற்றியுள்ளது. ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் மின்கட்டணத்தில் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி சேமிக்கப்படுகிறது. […]
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்; குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. அவ்வாறு இருந்தால் கட்டாயம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். குரங்கு அம்மை வரவே வராது என்று கூறவில்லை. 77 நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதேபோல் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் இதற்கென படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி பன்னாட்டு […]
தமிழகத்தில் வரும் 3-ம் தேதி வரை கணவனைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; தமிழ்நாட்டில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர் மற்றும் திருச்சி […]
டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களுக்கு 30 மாவட்டங்களில் மறு ஒப்பந்தப்புள்ளி கோருவது குறித்து மாநில வாணிப கழகம் கடிதம் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக மாநில வாணிபக் கழகம், அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில்; தமிழகம் முழுவதும் உள்ள 30 மாவட்டங்களில் மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களுக்கான ஒப்பந்ததாரர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறுதி செய்யப்பட்டனர். […]