லக்னோவின் பரபரப்பான கிரீன் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பிரபல ஆசிரியர் சூரிய பிரதாப் சிங் (35), தனது லிவ்-இன் பார்ட்னர் மற்றும் அவரது இரு மகள்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தையே அதிரவைத்துள்ளது. ஆசிரியர் சூரிய பிரதாப், ரத்னா (46) என்ற விதவை பெண்ணுடன் ஏற்பட்ட உறவால் தனது உயிரைப் பறி கொடுத்துள்ளார். டியூஷன் படிக்க வந்த ரத்னாவின் மகள்களே, தங்களது தாயை திருமணம் […]

வரும் 2026இல் உடல் எடையை குறைக்க திட்டமிடுபவர்களுக்கு ஆப்பிள் சீடர் வினிகர் (Apple Cider Vinegar) ஒரு வரப்பிரசாதமாக அமையலாம். இதனை நம்முடைய தினசரி வாழ்க்கை முறையில், குறிப்பாக இரவு நேரப் பழக்கவழக்கத்தில் சேர்த்துக்கொள்வது உடல் எடையை குறைப்பதில் ஆச்சரியமான மாற்றங்களை ஏற்படுத்தும். ஆப்பிள் சீடர் வினிகர் என்பது ஆப்பிள்களை நசுக்கி நொதிக்க வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்தச் செயல்முறையின் போது ஆப்பிளில் உள்ள சர்க்கரை சத்துக்கள் முதலில் ஆல்கஹாலாகவும், […]

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே யலமஞ்சிலி பகுதியில், நேற்று நள்ளிரவு டாடா நகர் – எர்ணாகுளம் விரைவு ரயிலில் (Express Train) ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயிலின் இரண்டு பெட்டிகள் திடீரென தீப்பற்றி எரிந்ததில், ஒரு பயணி பரிதாபமாக உயிரிழந்தார். நள்ளிரவு சுமார் 12.45 மணி அளவில் ரயிலில் தீப்பிடித்ததாகக் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. விபத்துக்குள்ளான ஒரு பெட்டியில் 82 பயணிகளும், மற்றொரு பெட்டியில் […]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக அரசியல் களத்தின் முக்கியமான ஆளுமையுமான ஆர்.நல்லகண்ணு (101), உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி தனது இல்லத்தில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததில் அவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டது. அதற்கான தொடர் சிகிச்சையில் இருந்து வந்த அவருக்கு, நேரடியாக உணவு உட்கொள்வதில் சிரமம் இருந்ததால், வயிற்றுப் பகுதியில் குழாய் பொருத்தப்பட்டு […]

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. பாரம்பரியமாக திமுக மற்றும் அதிமுக இடையே நிலவி வந்த இருமுனைப் போட்டி, தற்போது நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் மும்முனைப் போட்டியாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அக்கட்சியில் இணைந்தது முதல், மற்ற கட்சிகளில் உள்ள […]

2026ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்க நாடு முழுவதும் மக்கள் தயாராகி வரும் நிலையில், ஆன்லைன் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விநியோக துறையில் பெரும் முடக்கம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. ஸ்விக்கி (Swiggy), சொமேட்டோ (Zomato), ஜெப்டோ (Zepto) மற்றும் பிளிங்கிட் (Blinkit) உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் டெலிவரி ஊழியர்கள், வரும் டிசம்பர் 31-ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். புத்தாண்டு இரவு கொண்டாட்டங்களுக்காக ஆன்லைனில் […]

2025-ஆம் ஆண்டு விடைபெற இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், பிறக்கப்போகும் 2026 புத்தாண்டு சாமானிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரது வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல முக்கிய மாற்றங்களைச் சுமந்து வரவுள்ளது. நிதி பரிவர்த்தனைகள், வங்கி வட்டி விகிதங்கள், ஊதிய உயர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என பல்வேறு துறைகளில் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரவுள்ள இந்த மாற்றங்கள் குறித்து விரிவாக காண்போம். […]