பிரபல சமையல் கலைஞர் மற்றும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் நடுவரான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா எழுப்பியுள்ள திருமண மற்றும் கர்ப்பம் தொடர்பான சர்ச்சைக்கு, நீதிமன்றத்தின் மூலமாக மட்டுமே தீர்வு காண முடியும் என்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். தான் சட்டத்தை மட்டுமே நம்புவதாகவும், நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்துகொள்ள ஒப்புக்கொள்ள மாட்டேன் என்றும் மாதம்பட்டி ரங்கராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பல்வேறு பிரபலங்களின் சுபநிகழ்ச்சிகளில் […]

உலகளவில் யூடியூப் தளத்தின் சேவை சில மணிநேரம் முடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பை யூடியூப் தளத்தின் பயனர்கள் புதன் கிழமை இரவு எதிர்கொண்டுள்ளனர். கூகுள் நிறுவனத்தின் வீடியோ ஸ்ட்ரீமிங் சமூக வலைதளம்தான் யூடியூப். 122 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அதன் வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாடுகள் மூலம் தினசரி அடிப்படையில் YouTube ஐ அணுகுகின்றனர். சிலர் தங்களது வீடியோக்களை யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்தும் வருகின்றனர். இந்த தளத்தில் உலகின் […]

கர்நாடக மாநிலம் பெங்களூரு மாரத்தஹள்ளி காவல் எல்லைக்கு உட்பட்ட அய்யப்பா லே-அவுட்டில் வசித்து வந்த பிரபல தோல் நோய் மருத்துவர் கிருத்திகா, மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், அவரது கணவர் டாக்டர் மகேந்திரா 6 மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த கிருத்திகாவும், அவரது கணவர் மகேந்திராவும் மருத்துவர்கள். அறுவை சிகிச்சை நிபுணரான மகேந்திரா, கர்நாடகாவின் உடுப்பி, மணிப்பாலைச் சேர்ந்தவர் மற்றும் பெங்களூரில் உள்ள […]

பிரதமர் நரேந்திர மோடி விரைவில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக உறுதியளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், “ஆம், நிச்சயமாக. பிரதமர் நரேந்திர மோடி எனது நண்பர். எங்களுக்குள் மிகச் சிறந்த உறவு உள்ளது. இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது எனக்குப் பிடிக்கவில்லை. இருப்பினும், இந்தியாவால் அதை ‘உடனடியாக’ செய்ய முடியாது என்று பிரதமர் மோடி தன்னிடம் […]

கனமழை எதிரொலியாக நெல்லையை தொடர்ந்து மேலும் 2 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை: தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து நாளை விலகக்கூடும். அதே சமயம், வடகிழக்கு […]

நம்முடைய ஒட்டுமொத்த உடல்நலம், எடையை கட்டுப்படுத்துதல், நிம்மதியான தூக்கம், செரிமானச் செயல்பாடு மற்றும் வளர்சிதை மாற்றம் ஆகிய பல முக்கிய விஷயங்களை நிர்ணயிப்பது இரவு உணவுதான் என்று பல மருத்துவ ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. எனவே, இரவு உணவில் என்னென்ன இருக்க வேண்டும், அதை எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து இங்கே பார்ப்போம். இரவு உணவுக்கான சரியான நேரம் : இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் இரவு […]

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான (டிஆர்டிஓ) உருவாக்கிய ராணுவ வீரர்களுக்கான பாராசூட்டில் விமானப்படை வீரர்கள் 32,000 அடி உயரத்தில் இருந்து குதித்து வெற்றிகரமாக சோதித்துப்பார்த்தனர். இந்த சோதனை, உள்நாட்டு அமைப்பின் திறன், நம்பகத்தன்மை மற்றும் மேம்பட்ட வடிவமைப்பை நிரூபித்துள்ளது. முக்கிய சிறப்பு: தற்போது இந்திய ஆயுதப்படைகள் பயன்படுத்தும் பாராசூட்களில், 25,000 அடிக்கு மேல் செயல்படக்கூடிய ஒரே பாராசூட் இதுவாகும்.உருவாக்கம்: ஆக்ராவில் உள்ள வான்வழி விநியோக ஆராய்ச்சி மற்றும் […]