பாகிஸ்தானுக்கு புதிய மேம்பட்ட நடுத்தர தூர வானில் இருந்து வான் செல்லும் ஏவுகணைகள் (AMRAAMs) எதுவும் வழங்கப்படாது என்று அமெரிக்க தூதரகம் இன்று தெளிவுபடுத்தியது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் மத்தியில், இந்த ஏவுகணைகளை பாகிஸ்தானுக்கு வழங்குவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியான சில நாட்களுக்குப் பிறகு இந்த விளக்கம் வந்துள்ளது..
அமெரிக்க போர்த் துறை நிலையான ஒப்பந்த அறிவிப்புகளின் பட்டியலை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.. இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் “செப்டம்பர் 30, 2025 அன்று, போர்த் துறை நிலையான ஒப்பந்த அறிவிப்புகளின் பட்டியலை வெளியிட்டது, இது பாகிஸ்தான் உட்பட பல நாடுகளுக்கான பாதுகாப்பு மற்றும் உதிரிபாகங்களுக்கான ஏற்கனவே உள்ள வெளிநாட்டு இராணுவ விற்பனை ஒப்பந்தத்தில் திருத்தம் செய்வதைக் குறிக்கிறது,” என்று தெரிவித்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் “இந்த ஒப்பந்த மாற்றத்தின் எந்தப் பகுதியும் பாகிஸ்தானுக்கு புதிய மேம்பட்ட நடுத்தர தூர வான்-க்கு-வான் ஏவுகணைகளை (AMRAAMs) வழங்குவதற்கானது அல்ல. பாதுகாப்புத் திட்டத்தில் பாகிஸ்தானின் தற்போதைய திறன்களில் எதையும் மேம்படுத்துவது இல்லை,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : பிலிப்பைன்ஸில் 7.6 அளவில் பயங்கர நிலநடுக்கம்!. சுனாமி எச்சரிக்கை!. மக்கள் பீதி!.



