உத்தரபிரதேசம் மாநிலம் திகம்கர் பகுதியில், தகாத உறவால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரை இழந்த ரச்னா தேவி என்ற பெண், தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அப்போது முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. தகவலின்படி, ரச்னா தேவி தனது ஒரு பிரச்சினையை தீர்க்க, பக்கத்து கிராமத்தில் வசித்து வந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சஞ்சயிடம் உதவி கேட்டார்.
இந்த சந்திப்புகளின் மூலம் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு, அது பின்னர் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். சில மாதங்கள் இப்படியே உறவு நீடித்த நிலையில், ரச்னா தேவி சஞ்சயிடம் திருமணம் செய்யுமாறு வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகறாரு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் சஞ்சய் கோபமடைந்து, அவரை கொலை செய்ய முடிவு செய்தார். சஞ்சய் தனது மருமகன் சந்தீப் பட்டேலுடன் சேர்ந்து, ரச்னா தேவியை தனிமையான இடத்திற்கு வரச் சொல்லி அழைத்தார்.
அங்கு சென்றதும், பயங்கர ஆயுதங்களால் தாக்கி அவரை வெட்டிக்கொலை செய்தனர். அதுமட்டுமல்லாமல், சம்பவ இடத்திலேயே உயிரிழந்த ரச்னா தேவியின் உடலை 7 துண்டுகளாக வெட்டி, சாக்கு முட்டைகளில் அடைத்து, அருகிலிருந்த கிணற்றிலும் பாலத்தடிப் பகுதிகளிலும் தூக்கி எறிந்துள்ளனர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடற்கூறுகளை மீட்டனர். பின்னர் அவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
போலீஸ் விசாரணையில் உயிரிழந்தது ரஸ்னா தேவி என்பதும், கொலை செய்தது பஞ்சாயத்து தலைவர் சஞ்சய் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சஞ்சய் மற்றும் அவரது மருமகன் சந்தீப் பட்டேல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கள்ள உறவு இவ்வாறு கொடூரமாக முடிவடைந்திருப்பது உள்ளூர் மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.