பெற்றோர்களே உஷார்..!! மூச்சுக் குழாயில் சிக்கிய வாழைப்பழம்..!! 5 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்..!!

Erode 2025

ஈரோடு அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த மாணிக் – மகாலட்சுமி தம்பதியினரின் 5 வயது மகன் சாய்சரண், வாழைப்பழம் சாப்பிட்டபோது மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


நேற்று இரவு, சிறுவன் சாய்சரண் வீட்டில் வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் திடீரென மூச்சுவிட சிரமப்பட்டுத் திணற ஆரம்பித்தான். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் சிறுவனை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்குச் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவனின் மூச்சுக்குழாயில் வாழைப்பழத்தின் ஒரு பகுதி அடைத்திருப்பதாகக் கூறியுள்ளனர். மேலும், சிறுவனின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து, பெற்றோர்கள் பதற்றத்துடன் சிறுவனை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்குச் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே சாய்சரண் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இந்தச் செய்தியைக் கேட்டுத் தாங்க முடியாத பெற்றோர் கதறி அழுதது அங்கிருந்தவர்களை உலுக்கியது. அதன் பின்னர், சிறுவனின் மூச்சுக்குழாயில் அடைத்திருந்த வாழைப்பழத்தை மருத்துவர்கள் அகற்றினர். இந்தத் துயரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : இன்ஸ்டா காதலால் வந்த வினை..!! 42 வயது பெண்ணுடன் திருமணம்..!! 3ஆம் நாளில் வந்த முதல் கணவர்..!! 90ஸ் மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்..!!

CHELLA

Next Post

கொஞ்ச மழைக்கே, இவ்வளவு தண்ணீர்.. வடிகால் வசதிகள் செய்யப்படாததே காரணம்.. தமிழக அரசை சாடிய விஜய் !

Wed Dec 3 , 2025
டிட்வா புயல் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது.. தொடர் கனமழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.. சாலைகளும் குண்டும் குழியுமாக இருப்பதால் அலுவலகம் செல்வோரும் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.. இந்த நிலையில் இதுகுறித்து […]
TVk vijay stalin

You May Like