மகாராஷ்டிராவின் டவுண்ட் சந்திபிலிருந்து புனே சென்ற DEMU பயணிகள் ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் டவுண்ட் சந்திபிலிருந்து புனே சென்ற DEMU பயணிகள் ரயிலில் ரயிலின் கழிப்பறையில் லேசான தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக அவசர சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணிகள் அலறியப்படி வெளியேறினர். காலை 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக ரயில்வே காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீவிபத்து ஏற்பட்ட இடத்தில் சிலர் மட்டுமே இருந்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
தீ விரைவாக அணைக்கப்பட்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், சம்பவத்துக்குப் பிறகு அந்த பகுதியை புகை மூடியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயது பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரயில்வே காவல்துறையின் முதற்கட்ட விசாரணைகளின்படி, அந்த நபர் பீடி புகைத்து, அதை கழிப்பறையின் குப்பைத் தொட்டியில் வீசியதாக தெரிகிறது. அதில் இருந்த காகிதம் மற்றும் பிற எரிபொருட்கள் காரணமாக தீ மற்ற இடங்களுக்கு பரவ தொடங்கியது.
கழிப்பறையிலிருந்து புகை கிளம்பியதும் பயணிகள் பதற்றமடைந்தனர். ஆனால் நிலைமை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது, என ஒரு ரயில்வே போலீஸ் அதிகாரி கூறினார். சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகளும் காவல்துறையினரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பயணிகள் ரயில்களில் புகைபிடிப்பது போன்ற அபாயகர செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும், இது உயிர் பாதிக்கும் விளைவுகளுக்குள்ளாக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read more: மகாராஷ்டிர தேர்தல் பற்றிய ராகுல்காந்தியின் கருத்து நகைப்புக்குரியது.. முதலமைச்சர் ஃபட்னாவிஸ் பதில்..