பேட்ச்வொர்க் மாடல் முதல்வர் ஸ்டாலின்.. ரூ.6000 கோடி முதலீடு என்ன ஆனது? அண்ணாமலை சரமாரி கேள்வி..!

67bc6feae8ae1 annamalai slams dmks language policy hypocrisy 241101450 16x9 1

இந்தியாவின் மிகப்பெரிய தொழில்துறை தொழிலாளர்கள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா இன்று தெரிவித்திருந்தார்.. மேலும், அதற்கான புள்ளிவிவரங்களையும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஸ்டாலின் ” இந்தியாவின் தொழில்துறை தொழிலாளர்களின் பவர்ஹவுஸ் தமிழ்நாடு விளங்குகிறது! திராவிடத்தால் வாழ்கிறோம்! திராவிடமே நம்மை உயர்த்தும்! எல்லோரையும் வாழ வைக்கும்! திரு. அமித் ஷா முதல் திரு. பழனிசாமி வரை தி.மு.க. ஆட்சியைப் பழித்துரைக்கும் அனைவருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசே தந்துள்ள ‘நெத்தியடி பதில்’ இதோ!


சட்டம் ஒழுங்கைப் பேணிக்காத்து, தொழில் சூழலை மேம்படுத்துதல், தடையற்ற மின்சாரம் – போக்குவரத்து வசதிகள் என அடிப்படைக் கட்டமைப்புகள் உருவாக்கி, வேலைக்குத் தேவையான திறன்களை இளம் தலைமுறையினருக்கு அளித்து நாம் நாளும் தீட்டிய திட்டங்களால் இந்தச் சாதனை சாத்தியமாகி இருக்கிறது!

திராவிட ஆட்சியின் சாதனைச் சரித்திரம் தொடரும்! அரசியல் காழ்ப்புணர்வில் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக அள்ளிவீசப்படும் அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை என மக்கள் புறந்தள்ளுவார்கள்!” என்று குறிப்பிட்டிருந்தார்.

முதல்வரின் இந்த பதிவை விமர்சித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.. அவரின் எக்ஸ் பதிவில் “ பேட்ச்வொர்க் மாடல் முதல்வர் திரு ஸ்டாலின் வரி செலுத்துவோரின் செலவில் இதற்காக நீங்கள் ஒரு கொண்டாட்டத்தை நடத்துவதற்கு முன், சில புள்ளிவிவரங்களை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். 2020-21 ஆம் ஆண்டிற்கான தொழில்துறை ஆண்டு கணக்கெடுப்பின்படி – முதல் 5 மாநிலங்களில் தமிழ்நாடு: 15% குஜராத்: 12.7% மகாராஷ்டிரா: 12.3% உத்தரபிரதேசம்: 6.8% கர்நாடகா: 6.2% உ.பி.யில் வேலைவாய்ப்பின் பங்கு 1.2% மற்றும் மகாராஷ்டிராவில் 0.7% அதிகரித்துள்ளது.

இதனிடையே, 2020-21 ஆம் ஆண்டைப் போலவே 2023-24 ஆம் ஆண்டிலும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பின் பங்கு அப்படியே உள்ளது. துபாயிலிருந்து ரூ.6000 கோடி முதலீட்டிற்கு என்ன ஆனது? கடந்த 4 ஆண்டுகளில் தொழில்துறை தொழில்முனைவோர் குறிப்பாணை மூலம் பெறப்பட்ட முதலீடுகளில் தமிழ்நாட்டின் நிலை என்னவென்று முதல்வருக்குத் தெரியுமா?

தமிழ்நாடு: ₹37,307 கோடி ஆனால், குஜராத்: ₹2,89,110 கோடி மகாராஷ்டிரா: ₹1,65,655 கோடி உத்தரப்பிரதேசம்: ₹56,900 கோடி.

இந்த திமுக அரசு கடந்த கால பெருமைகளை அனுபவிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது, மேலும் மாநிலத்தின் எதிர்காலம் குறித்த தொலைநோக்குப் பார்வையை இழந்துவிட்டது.” என்று குறிப்பிட்டுள்ளார்..

RUPA

Next Post

#Breaking : முதல்வர் ஸ்டாலினுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு.. என்ன ஆச்சு? அமைச்சர் எ.வ. வேலு சொன்ன அதிர்ச்சி தகவல்..

Thu Aug 28 , 2025
சென்னை நந்தனத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது.. இந்த மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எ.வ வேலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளது.. இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வதாக இருந்தது.. ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை.. இந்த மாநாட்டில் முதல்வர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பது குறித்து அமைச்சர் ஏ.வ. வேலு தெரிவித்துள்ளார்.. இந்த மாநாட்டில் பேசிய அவர் “ ஒப்பந்ததாரர்கள் மாநாடு என்று சொன்ன […]
1035559

You May Like