ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே வாழ்நாள் சான்று அளிக்க தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தியுள்ள பாராட்டுக்குரிய வசதி களஞ்சியம் என்ற Mobile App மூலம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
வாழ்நாள் சான்று என்பது ஒரு நபர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு ஆவணமாகும். இது பொதுவாக ஓய்வூதியம் பெறுபவர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் பிற அரசு சலுகைகளைப் பெறுபவர்களால் சமர்ப்பிக்கப்படுகிறது. ஓய்வூதியம் பெறுபவர்கள், அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்த ஒவ்வொரு ஆண்டும் இந்த சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
இறந்த பணியாளரின் குடும்ப உறுப்பினர்கள், அவர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் மற்றும் ஓய்வூதியத்திற்கு தகுதியானவர்கள் என்பதை நிரூபிக்க இந்த சான்றிதழ் தேவைப்படுகிறது. சில அரசு சலுகைகளைப் பெறுபவர்களும், வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியிருக்கலாம். இந்த நிலையில் ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே வாழ்நாள் சான்று அளிக்க தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தியுள்ள பாராட்டுக்குரிய வசதி களஞ்சியம் என்ற Mobile App மூலம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
தங்கள் PPO போன்ற விபரங்களை உள்ளீடு செய்து நான்கு இலக்க PIN ஐ save செய்து உள்ளே சென்று Mustering என்ற option ஐ தெரிவு செய்து அதில் வரும் பச்சை நிற வட்டத்தில் தங்கள் முகத்தை கண்ணாடி இன்றி காண்பித்து இரண்டு அல்லது மூன்று முறை கண்களை சிமிட்டினால் உங்கள் வாழ்நாள் சான்று ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு அடையாளமாக SMS உடனே வந்துவிடும். இந்த முயற்சியை பகலில் மட்டும் செய்ய வேண்டும். https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam என்ற இணையதளத்தில் இருந்து செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .
Read More: பிறக்கும் குழந்தைகள் வெள்ளையாக இருந்தால் மரண தண்டனை.. வினோத வழக்கம் கொண்ட பழங்குடி மக்கள்..!!